பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

II & திருக்குறள் செய்தவர்கள் பயப்பட மாட்டார்கள்; தீவினை செய்யாதவர்கள் பொல்லாங்குகளைச் செய்வதற்குப் பயப்படுவார்கள் என்றவாறு. முன் செய்து அறிந்தவர்கள் பயப்படார்கள், முன்தீவினை செய்யாதவர்கள் அறியாதபடியினாலே பயப்படுவார்கள். தி 202. தீயவை தீய பயத்தலால் தீயவை தீயினும் அஞ்சப் படும். என்பது தனக்கு இன்பம் வருவதற்காகச் செய்யப்பட்ட பொல்லாங் குகள், பின்பு தனக்கே தீமைகளைச் செய்கிற படியினாலே, நெருப்பைப் பார்க்கிலும் அதிகமாகப் பயப்பட வேணும் என்றவாறு. அது எப்படி என்றால், பின்னையொரு காலத்திலேயும் பிறிதோர் தேசத்திலேயும் பிறிதோருடம்பிலேயும் தீயானது சுடுகிறது இல்லை. தீவினை யாகிய நெருப்பைப் பார்க்கிலும் தீவினைக்கு அஞ்ச வேண்டும் என்பதாம். உ 203. அறிவினுள் எல்லாம் தலை என்ப தீய செறுவார்க்கும் செய்யா விடல் என்பது தனக்கு உறுதி பயக்கப்பட்ட அறிவுகளுக்கெல்லாம் தலை யாய அறிவு என்கிறது. தன் பகைவர்களுக்கும் பொல்லாங்கைச் செய்யாம லிருக்கிறது என்றவாறு. பொல்லாங்கு ஒருவருக்கும் செய்யலாகாது என்பதாம். கூட 204. மறந்தும் பிறன் கேடு சூழற்க சூழின் அறம்சூழும் சூழ்ந்தவன் கேடு என்பது பிறருக்குக் கேடு வரும் வினைய மறந்தும் நினைக்க வேண்டாம்; நினைத்தால் அவனுக்குத் தருமதேவதை கேடு நினைக்கும் என்ற வாறு. H

  • தீவினையாகிய நெருப்போ மறுபிறப்பிலே பாதை பண்னுகிறதினாலே

- அச்சு நால் பக்கம் 81 1. பயக்கும்