பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 1 & திருக்குறள் அவனை விடாமல் வந்து அவனடி யிலே அடங்குகிறாப் போலே என்றவாறு. தீவினையும் செய்தவனை விடாமல் கூட இருந்து தன் காலம் வந்தபோது கெடுக்கும் என்பதாம். تائے۔{ 209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றும் துன்னற்க தீவினைப் பால் என்பது ஒருவன் தன்னைத்தான் வேண்டினவனானால் எந்த ஜீவனிடத் திலேயும் சற்றும் தீவினைகளைச் செய்யாமலும் நினை யாமலும் இருக்கவேண்டு மென்றவாறு. பிறருயிர்களுக்குத் தீங்கு செய்தால்தானே கெடுவான் என்பதாம். BF 210. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் என்பது ஒருவன் பிறரிடங்களிலே போய் அவர்களுக்குத் தீங்கு செய்யாம லிருந்தால் அவனுக்குக் கேடில்லை என்றவாறு. i. D ஆக அதிகாரம் உயகக்குக்குறள் உளய இப்பால் 22. ஒப்புரவறிதல் என்பது, உலகத்திற் கேற்ற நடத்தையை அறிந்து செய்வது. உலக நடத்தையாவது, தருமசாஸ்திரங்களிலே சொல்லப்பட்ட தருமத்தின் வழியே நடப்பதென்பதாம். 211. கைம்மாறு வேண்டா கடப்பாடு மாரிமாட் டென்னாற்றுங் கொல்லோ உலகு என்பது உலகத்திற்கு மழைபெய்து இரrதிக்கின்ற மேகங்களைப் போல ஒருவனுக்குச் செய்கிற உபகாரத்திற்குப் பிரதியுபகாரம் அவன் செய்ய வேணுமென்று நினையாமல் செய்கிறதே உபகாரம் என்றவாறு.