பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 19 செய்த உபகாரத்திற்குப் பதில் உபகாரம் வேணுமென்று நினைத்தால் கடன் கொடுத்து வாங்குவது போலேயா மென்ற வாறு. தி 212. தாளாற்றித் தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டு என்பது நல்லவர்கள் நல்ல உத்தியோகங்களைப் பண்ணித் தேடின திரவிய மெல்லாம், சத்பாத்திரர்களாகிய,முனிகளுக்கு உபகாரம் செய்கிறதற்கு என்றவாறு. o முனிசுவரர்களுக்கு உபகாரம் செய்யவே தமக்கு இன்பம் பெருகும் என்பதாம். 학 2.13. புத்தேன் உலகத்து மீண்டும் பெறலரிதே ஒப்புரவின் நல்ல பிற - எ ன்பது தேவ லோகத்திலே பிறந்த பேர் திரும்பவும் தேவலோகத் திலே பிறக்க மாட்டார்; அது ஏனென்றால் தேவருலகத்தில் ஏற்கிற பேருமில்லை; இடுகிற பேரும் இல்லை; எல்லாரும் சரியாயிருக்கிற படியினாலே தான தருமங்களைப் பண்ணுகிற தில்லை; தான தருமங்களைப் பண்ணின பேர்களுக்கல்லாமல் மற்றப் பேர்களுக்குத் தேவ லோகம் இல்லை யானபடியினாலே , 鷺 பிறந்தவர்கள் தானதருமங்களைப் பண்ண வனும எனறவாறு. ЛНп — 2 I 4. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான் செத்தாருள் வைக்கப் படும் என்பது உலக வியற்கையை யறிந்து நடக்கின்றவனே உயிருடனே இருக்கிறவன்: உலகவியற்கையை அறிந்து நடவாதவன் பிரான 1. கையெழுத்துச் சுவடியில் 'சத்பாத்திரர்களாகிய முனிகளுக்கு’ என்பது அடிக்கப்பட்டுப் பிறருக்கு என்றும் . 'முனிசுவரர்களுக்கு' என்பது அடிக் கப்பட்டுப் பிறருக்கு என்றும் எழுதப்பட்டுள்ளது. -