பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 20 திருக்குறள் னுடனே இருந்தாலும் செத்துப் போனவர்களோடு ஒப்பான் என்றவாறு து 2 I 5. ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு * என்பது உலக இயற்கை யினை அறிந்து செய்யப்பட்ட அறிவினை யுடையவன் செல்வம், ஊரிலே இருக்கிற பேர் எல்லாராலும் மொள்ளப்பட்ட நல்ல தண்ணிர்க் குளம் நிறைந்தாற் போலும் என்றவாறு. அறிவுடையவன் செல்வம் பாழ் போகாமல் எல்லாருக்கும் உதவும் என்பதாம். டு 2I 6. பயன் மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம் நயனுடை யான்கட் படின் என்பது பயன் கொடுக்கிற மரம் ஊர் நடுவே யிருந்து பழுத்தாற் போலும், அறிவுடையவர் பலருக்கும் உதவும் செல்வம் என்ற வாறு. அறிவுடையவன் செல்வம் எல்லாருக்கும் எளிதாய்ப் பயன் கொடுக்கும் என்பதாம். அச 217. மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம் பெருந்தகை யான்கட் படின் என்பது அறிவுடையவனுக்கு ஐசுவரியம் வந்தால் எல்லாருடைய உபத்திரவங்களையும் தீர்ப்பான், வியாதிகளைத் தீர்க்கும் மருந்து மரத்தைப் போல என்றவாறு. aТ 218, இடனில் பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார் கடனறி காட்சி யவர் என்பது