பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 2.2 திருக்குறள் 221. வறியார்க்கொன் றிவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர துடைத்து என்பது தரித்திர ரான பேர்கள் கேட்ட பொருளை அவர்களுக்குக் கொடுக்கிறதே பிறர்க்குக் கொடுக்கிறதாகிறது: அஃதல்லாமல் ஐசுவரிய வான்களுக்குக்கொடுக்கிற தெல்லாம் தான் கொடுத் ததைப் பார்க்கிலும் அதிகமாய் வாங்கிக் கொள்ள வேண்டி என்றவாறு. தி 222. நல்லா றெனினும் கொளல்தீது மேலுலகம் இல்லெனினும் ஈதலே நன்று என்பது ஏற்கிறது மேலுலகத்திற்கு நன்றென்று சொல்வாராயினும் ஏற்கிறது பொல்லாது என்பது; கொடுக்கிறவர்களுக்குத் தெய்வ லோகம் இன்று என்று சொல்பவர் உண்டாயினும் கொடுப்பதே நன்மையும் தன்மமுமாம் என்றவாறு சில பிரதிகளில் நல்லார் என்று பாடங்கொண்டு பின் வரும் உரை உளது' (உரை காகிதப் பிரதியில் தரப்படவில்லை) மேலும் மேற்கண்டவை முழுமையாக அடிக்கப்பட்டுப் பின்வரு மாறு எழுதப்பட்டுள்ளது: ஏற்கிறது மேலுகத்திற்கு நல்லதென்று சொல்லுகிறவர்கள் உண்டானாலும் கொடுக்கிறதே நல்லதென்றவாறு. மற்ற தர்மங்கள் எல்லாவற்றிலும் கொடுக்கிறதே நல்லதர்மம் என்றதாம். EP 223. இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ணே உள என்பது ஞான தியானம் பொருள் பந்துக்கள் முதலியன இல்லையே எனத் துன்பத்தோடு மொழியாத தன்மை ஈகையினாலே வரும்; அதுவும் உயர்ந்த குலமுடையவர்களிடமே யுளது என்றவாறு. == 1. அவ்வுரை யைக் குறிப்புரையில் காண்க