பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 2 3 உயர்ந்த குலமுடைய வீட்டில் பிறந்து அதிதி"களுக்கு கி. தானம் கொடுத்தால் ஐசுவரியத்தோடே ஞானம் கிடைக்கும்: அவர்களுக்குக் குறைச்சல் எதுவும் இல்லை என்பதாம். H__ 224. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர் இன் முகம் காணு மளவு ான்பது

  • கருணையுடைய இனிய முகத்தினின்று கூறும் தருமவசன முடைய அதிதி வருமளவும் பரிதாப' முடையவர் போலே மன மிரங்கக் காட்டி, முனிகள் வந்தால் பக்தியில்லாது இருக்கிறது பொல்லாங்கு என்றவாறு.

பிறர் மெச்ச மாயத்தால் காட்டுகின்றது பாவமும் துர்க்கதி யுமாம் என்பதாம். ' குறிப்பு: 'முதல் *வரை அடிக்கப்பட்டுப் பின்வருமாறு காகிதச் சுவடியில் எழுதப்பட்டுள்ளது: இரக்கிறது பொல்லாதென்று சொல்லுவர்கள் இரக்கிறவர் களுடைய முகத்தைக் கண்டவிடத் திலேயே யென்றவாறு. இரக் கிறவர்களும் இரக்கிறது பொல்லாதென்று சொல்லுவர்கள் தான் கேட்ட பொருள் வருமளவு மென்பதாம். 125. ஆற்றுவா ராற்றல் பசியாற்ற லப்பசியை மாற்றுவா ராற்றலின் பின் (என்பது தபம் பண்ணுகிற வர்களுக்கு வலிமையாவது, உபவாசம் இருந்து பசிப்பிணியைப் பொறுக்கிறது; அத்தகைய உத்தமர் களுக்குக் கொடுத்த தான புண்ணியத்திற்குப் பிறகே மற்றத் தருமங்கள் என்றவாறு1* 1. அதிதி-புதியவர் 2. இரக்கம் முதல் * வரை: காகிதச்சுவடியில் உரையில்லை: அச்சுநூலிற் கண்டு எழுதியவை.