பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஜைனஉரை 11
இருவினைக்கு மாமருந்து" என்று பாராட்டினர்: "சுருங்கிய சொல்லால் விரித்துப் பொருள் விளங்கச் சொல்லுதல் வல்லார் ஆர் வள்ளுவர் அல்லால்" என்று வியந்தனர்; "உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே வள்ளுவர் வாய் மொழி மாண்பு" என்று அனுபவித்து உரைத்தனர்; "எல்லாப் பொருளும் இதன் பாலுள" என்று துணிந்து கூறினர்: இந் நூலொன்றே வையத்துணை” என்றனர்.

இங்ஙனம் பல்லாற்றானும் புகழப்பெற்ற திருக்குறளை "உள்ளிருள் நீக்கும் விளக்கு" என்றார் நப்பாலத்தனார். இத்திருக்குறளாகிய விளக்குக்கு அகல் - அறம்; திரி - பொருள்; நெய் - இன்பம்; செஞ்சொல் - தீ; தண்டு - குறட்பா பின் வருவது அப்பாடல்:-

அறந்தகளி; ஆன்ற பொருள்திரி: இன்பு
சிறந்தநெய், செஞ்சொல் தீ; தண்டு-குறும்பாவா;
வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள்
உள்ளிருள் நீக்கும் விளக்கு.

இத்திருக்குறளை எல்லாச் சமயத்தினரும் தத்தம் சமயக் கோட்பாடுகளை உணர்த்தும் நூல் என்று கூறுவது எனினும் ஜைந சமயத்தவர் திருக்குறளை "எம் ஒத்து" என்று கூறுதலினின்றும் திருவள்ளுவரைச்சைன சமயத்தவர் என்று ஒருசாரார் கூறுவர். ஜைன சமய சித்தாந்தத்தின்படி திருக்குறளையியற்றியவர் ஶ்ரீகுந்த குந்த ஆசாரியர் என்பவர் ஆவர்.

ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர் கி.மு. 52 முதல் கி.பி. 44 வரை வாழ்ந்தவர்*. இவர் 95 ஆண்டுகள் 10 திங்கள் 15 நாட்கள் உயிர் வாழ்ந்தார். இவருக்குப் பத்ம நந்தி, வக்கிர கிரீவர், கிருத்ர பிஞ்சர், ஏலாசாரியர் என்ற பெயர்களும் உண்டு; இவரைப் பற்றிய பாடல்கள் சிலாசாஸனமாகச் சிரவண பெல்கோலாவில் உள்ளன. (தி. ஆ. பக் ௯௬ - ௯எ) இந் நாளில் திருப்பாதிரிப் புலியூர் எனப்பெறும் ஊர் அந்நாட்களில் ‘பாடலி


குந்த குந்தர் ஏலாசாரியர் என்னும் பெயர்களை யுடைய திருக்குறளாசிரியர் கி.பி: 108இல் குருபீடத்திற்கு வந்து கி.பி. 160 வரை இருந்திருக்கிறார். இவர் ஜனன காலம் கி.பி. 64. தி. ஆ. பக். அ௩)