பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 திருக்குறள் 236. தோன்றிற் புகழொடு தோன்றுக வஃதிலார் தோன்றலிற் றோன்றாமை நன்று என்பது மனுஷனாகப் பிறந்தால் கீர்த்திக் கேதுவாகிய குணத் தோடுங் கூடப் பிறக்கவேணும்; அந்த நற்குணமில்லாத பேர் மனுஷனாக பிறக்கிறதிலும் விலங்காய்ப் பிறக்கிறது நல்ல தென்றவாறு. மனுஷனை நற்குணமில்லாவிட்டால் இகழ்ந்து பேசுவார் கள், விலங்கு சாதியாய்ப் பிறந்தாலிகழார்களென்பதாம். சிக 237. புகழ்பட வாழாதார் தன்னோவார் தம்மை யிகழ்வாரை நோவ தெவன் என்பது தமக்குப் புகழுண்டாக வாழமாட்டாதவர்கள் தம்மை யிகழ்கின்றவர்களை நாம் கீர்த்தி தேடிக்கொள்ள மாட்டாத படியினாலே நம்மையிகழ்கிறார்க ளென்று தம்மைத்தாம் நொந்து கொள்ளாதே தம்மை யிகழ்கிறவர்களை நோ கிற தென்ன காரியங்கண் டென்றவாறு. புகழ் பெறலாயிருக்க அது பெறமாட்டாத படியினாலே யிகழ்வார்களென்பதாம் ○T 238. வசையென்ப வையத்தார்க் கெல்லா மிசையென்னு மெச்சம் பெறாஅ விடின் என்பது புகழென்னும் பிள்ளையைப் பெறலாயிருக்க அந்தப் புகழைப் பெறமாட்டா விட்டால் உலகத்தார்க் கெல்லாம் அதுதானே குற்றமாயிருக்கு மென்றவாறு. اس۔ 239. வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா யாக்கை பொறுத்த நிலம் என்பது 1. தந்நோவாச் என்பதே சரியான பாடம்