பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 131 244. மன்னுயிர் ஒம்பி அருள் ஆள்வாற் கில்லென்ப தன்னுயிர் அஞ்சும் வினை என்பது நித்தியமா யிருக்கிற சீவன்கள்மேல் தயையை வைத்து நடக்கிற வர்களுக்குத் தங்கள் சீவன் பயப்படத் தக்க பாபங்கள் உண்டாகா என்றவாறு శ్రీడా 245. அல்லல் அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு மல்லன்மா ஞாலங் கரி என்பது அருளுடையவர்களுக்கு இம்மை மறுமை இரண்டிலேயும் ஒரு துக்கமும் உண்டாகாது. அதற்குக் காரணம் காற்றுப் பாவப்பட்ட பெரிய பூமியிலே வாழ்கிறவர்களும் அருகனும் சாட்சி யென்றவாறு. இம்மைக்கு உலகிலுள்ள சான்றோரும் மறுமைக்குத் திரிகால ஞானியாகிய அருகனும் சாட்சி குறிப்பு: மேலே இங்குக் கீழ்க்கோடிட்டவை காகிதச் சுவடி யில் அடிக்கப்பட்டுள்ளன. மேலும் வாழ்கிறவர்களும் அரு கனும்' என்ற இடத்தில் 'அவர்களே' என்றுளது. டு 246. பொருள் நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி அல்லவை செய்தொழுகு வார் என்பது சீவன்களிடத்திலே செய்யப்பட்ட தயையை விட்டுத் தீவிரத் துக்கக் கொடுமைகளை" ச் செய்கிறவர்களை முந்தின ஜென் மத்திலே தமக்குறுதியான தருமங்களைச் செய்யாமல் துக் கப்படு கிறதை மறந்தவர்கள் என்று சொல்லுவார்கள் அறிவுள்ளவர்கள் என்றவாறு, 1. அருகன்: பவன, வியந்தா, ஜோதிஷ்க கல்பவாசிகள் முதலான வர்களால் பூஜிப்பதற்குரியனாதலால் அருகன் என்பது (பக்கம் 110 திருக் குறள் ஆராய்ச்சி) 2, "தவிரத்தக்க கொடுமைகளை' என்று காகிதச் சுவடியில் திருத்தப்பட் டுள்ளது.