பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 32 திருக்குறள் 247. அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்' கிவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பது சிவன்கள் மேலே அருள் இல்லாதவர்களுக்கு வீட்டுலகத் தின் இன்பமில்லை, பொருளில்லாதார்க்கு இந்த உலகத்திலே இன்பமில்லை யானாற்போல் என்றவாறு. இவ்வுலகத்தின் பத்திற்குப் பொருள் காரணமானாற்போல, அவ்வுலகத்தின்பங்களுக்கு அருள் காரணம் என்றவாறு. GT 248. பொருளற்றார் பூப்பர் ஒருகால் அருளற்றார் அற்றார்மற் றாதல் அரிது என்பது முன்செய்த தீவினையால் தரித்திரரான பேர்கள் அந்தத் தரித்திரம் போய்ப் பிறகு ஒரு காலத்திலே ஐசுவரியவான்களா வார்கள்; அருளில்லாதவர்கள் பாவந்தொலையாமல் அழிந்து நரகத்திற் போகிறதல்லாமல் பின்னையொருகாலத்திலும் பாபம் போய்ப் புண்ணிய வான்களாகிறது அருமை என்றவாறு. تلے | 249. தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரின் அருளாதான் செய்யு மறம் என்பது சீவன்க ளிடத்திலே தயை யில்லாதவன் செய்கிற தருமத்தை ஆராய்ந்து பார்த்தால் சமயக்" ஞானம் இல்லாதவன் நிச்சயமா யிருக்கிற சிவன்முதலிய ஆறு வித வஸ்து ஸ்வரூபத்தைச் சொன்னாற்போலும் என்றவாறு. ஞானமில்லாதவன் ஒருபொருளை அறிந்தால் அதனைத்திட ஞான மில்லாதபடியினாலே தானே அழித்து விடுவன்; அப்படிப் போல அருளில்லாதவன் செய்த தருமமும் அவனுக்குத் தயை யில்லாத படியினாலே தானே அழித்துப் போடுவான் என்பதாம். அருளலார்க்' என்பது பிறர் கொண்ட பாடம். + கோடிடப்பட்டவை காகிதச் சுவடியில் அடிக்கப் பட்டுள்ளன 1. குறிப்புரை காண்க