பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 1 5 9 ஆகவே சகல தருமங்களுக்கும் தயையே முந்தின தரும மென்ற வாறு. அன 250. வலியார்முற் றன்னை நினைக்க தான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து என்பது தன்னினும் பலவானானவன் தன்னை வாதை பண் ண வருகிற போது அவர்கள் முன்னே தான் பயப்பட்டு நிற்கிற நிலையை நினைத்துக் கொள்ள வேண்டும், தான் தன்னிலும் ஏழையான பேரை வாதை பண்ணப்போகிற போது என்றவாறு. அதன் நடுக்கத்தை நினைத்தால் எதிராளிக்கும் இப்படி யல்லவோ இருக்கம் என்று தயையுண்டாம். () ஆக அதிகாரம் உ0ருக்குக்குறள் ԶԼ ՅTT ᏈiᏇ இப்பால் 26. புலால் மறுத்தல் என்பது மாங்கிசம் தின் கிறதை விட்டுவிடுகிறது. மாங்கிசம் சிவன் களைக் கொல்லாமல் வாராது; சீவன்களைக் கொல்லுகிற வர்களுக்குத் தயை யென்பதிராது. தயையில்லாதவன் என்ன தர்மம் பண்ணினாலும் ஒரு பலனு மில்லாமல் சா பலிலே வார்த்த நெய்போலாம் என்பதாம். 251. பொருளாட்சி போற்றாதார்க் கில்லை அருளாட்சி ஆங்கில்லை யூன்றின்ப வர்க்கு” என்பது பொருளினால் பலன் கொள்ளுகிறவர்களுக்கு அந்தப் பொரு ளைக் காத்து ரகசியா விட்டால் பலனில்லை; அதுபோல அருளினால் பலனாகிய நற்கதி யடைய வேணுமென்றவர்கள் மாங்கிசம் தின்னாமல் இருக்க வேணும். மாங்கிசம் தின்றால் தயையும் நற்கதியும் இல்லாமற் போகுமென்றவாறு. ДЕ. 1. மாமிசம் - ஊன்

  • பரிமேலழகர் உரையில் இது 252 ஆம் குறள்.