பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 34 திருக்குறள் 252. தன்னுன் பெருக்கற்குத் தான் பிறி துனுண்பா னெங்கனம் ஆளும் அருள்* என்பது தன்னுடம்பு பெருக்கிறதற்காகத் தான் பின்னையொரு சீவனுடைய சரீரத்தைத் தின் கிறவன் எப்படித் தயையுடையவ னாகப் போகிறான்? ஒருபலனு மில்லாத வுடம்பைப் பருக்க வேண்டுமென்று கொடிதான பாபங்களைச் செய்கிறவனே அறிவில்லாதவன் என்றவாறு. 보L 253. படைகொண்டார் நெஞ்சம்போ னன்றுக்கா தொன்றின் உடல்சுவை யுண்டார் மனம் என்பது கொல்லத்தக்க ஆயுதத்தைக் கையிலே பிடித்தவர் மனசு அந்த ஆயுதத்தாலே செய்யப்பட்ட கொலையையே செய்யப் பார்க்கு மல்லாமல் தயையைப் பாராது; அதுபோல ஒரு சீவன் உடம்பைத் தின்றவன் மனது மாங்கிசத்தினையே தின்ன வேணு மென்று எண்ணுகிற தல்லது தயையை நினையாது என்றவாறு, Нц. 254. அருளல்லதி யாதெனிற் கொல்லாமை கோறல் பொருளல்ல தவ்வூன் றினால் என்பது தயை யாகிறது ஏதென்றால் ஒரு சீவனையும் கொல்லாமல் இருக்கிறது: அருளல்லாதது ஏதென்றால் சீவன் களைக் கொல்லு கிறது; கொன்ற சீவன்களுடைய மாங்கிசங்களைத் தின் கிறதே பாவ மென்றவாறு. அா 255. உண்ணாமை யுள்ள துயிர்நிலை ஊனுண்ண அண்ணாத்தல் செய்யா தளறு. என்பது மாங்கிசங்களைத் தின்னாமலிக்கிறதே தருமம்; அந்தத் தரும முண்டானவன் மறுசன் மத்திலே வியாதியில்லாத நல்ல

  • பரிமேலழகருரைப்படி இது 251 ஆம் குறள்