பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12 திருக்குறள்

புரம்’ என்று அழைக்கப்பட்டது. இப்பாடலில் ஒரு ஜைன சங்கம் அந்நாளில் சிறந்து விளங்கியது. இவர் அந்த ஜைந சங்கத்துக்குத் தலைவராகத் திகழ்ந்தார். இவர் ஜைந சமயக் கோட்பாடுகளைக் கரைகண்டுணர்ந்தவர். பிராகிருத மொழியில் பல நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் பஞ்சாஸ்திகாயம், பிரவசனஸாரம், ஸமயஸாரம் என்ற மூன்று நூல்கள் மிகச் சிறந்தவையாகும். இம்மூன்றும் ‘பிரப்ருதத்திரயம்’ என்று குறிக்கப்படும். இவ்வாசார்ய குந்தகுந்தர் தமிழில் எழுதிய நூல் திருக் குறள்ஒன்றேயாகும் என்று ஜைந சமயத்தார் கருதுவர். இவருக்கு ஏலாசாரியர் என்ற பெயரும் உண்டு என்று மேலே கூறப்பட்டது.

“ஏலாசாரியரால் சிருஷ்டிக்கப்பட்ட திருக்குறள்” என்று திரு T.S. ஶ்ரீபால் நயினார் அவர்களிடம் இருந்து பெற்ற திருக்குறள் ஜைநருரை கொண்ட ஒலைச்சுவடியில் காணப்படுவதாகப் பேராசிரியர் அ. சக்ரவர்த்தி அவர்கள் திருக்குறள் - கவிராச பண்டிதர் உரை நூலின் முகவுரையில் கூறுவது இங்கு அறிதற்பாலதாகும். எனவே திருக்குறளை இயற்றியவர் ‘ஏலாசாரியர்’ என்றும், ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தருக்கு ஏலாசாரியர் என்று பெயர் இருந்தமையின் ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர் தமிழில் இயற்றிய நூல் திருக்குறள் ஆகும் என்றும், திருக்குறள் ஜைநசமயக் கோட்பாடுகளைக் கூறுவது என்றும் அறியப் பெறும்.

இவர் பிராகிருத மொழியில் இயற்றிய நூல்கள் 52 ( கி.ஆ. பக் 92) இவற்றுள் 21 நூல்களைப் பற்றிச் சிறு குறிப்புக்கள் அருகன் தத்துவம் சுவடி 3, ஏடு 4,5, பக் 8-12 வரை தரப் பெற்றுள்ளன. (ஆண்டுக் காண்க).

ஏலாசாரியராகிய ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர் அருளிய அற நூலாகிய திருக்குறளைக் கண்டு மகிழ்வெய்தி, ஆசாரிய ஶ்ரீகுந்த குந்தருடைய மாணாக்கர்களில் ஒருவரும் வானப் பிரஸ்தாஸ்ரமத்தை யுடையவரும் ஆகிய ‘திருவுள்ளம் நயினார்’