பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 14 I மனதிலே கபடம் வைத்துக்கொண்டு கள்ளாசாரம் பண்ணி நடக்கிறவனை அவன் சரீரத்திலே யிருக்கிற பஞ்சபூதங்களுஞ் சிரிக்கு மென்றவாறு. கபடமாகிறது மனசிலே யொன்றை நினைத்துக் கொண்டு வெளியிலே யிருக்கிற பேருக்கு அது தெரிய வொட்டாமல் ஆசார வான்போலே யிருக்கிறது. தி 27 2. வானுயர் தோற்ற மெவன்செய்யுந் தன்னெஞ்சந் தானறி குற்றப் படின் என்பது ஒருவனுக்கு ஆசாரத்தைப் போலு முயர்ந்த தவசு வேஷம் என்ன பலனைக் கொடுக்கும். தான் குற்றமென்று விட்ட வஸ்த்துவின் மேலே தன் னெஞ்சு ஆசை பற்றினால் ஒரு பலனை யுங் கொடுக்க மாட்டா தென்றவாறு. அறியாமற் செய்த குற் றம், தபசு பண்ணினால் பரிகாரமாய்ப் போம்; அறிஞ்சு செய்த குற்றம், என்ன தபசு பண்ணினாலும் அனுபவியாமற் போகா தென்றவாறு. - 의_ 273. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று என்பது மனத்தைத் தன்வழிப் படுத்தி அடக்க மாட்டாதவன் தபசைப் பண்ணுகிறேனென்று வேஷத்தைப் போட்டுக் கொண்டு இருக் கிறது பயிரைக் காக்கிறவர்கள் பயப்பட்டு ஒட்டிவிடாமல் இருக்க வேண்டுமென்று ஒரு எருதுக்குப் புலித் தோலைப் போர்த் துப் பயிரிலே மேய விட்டாற் போலு மென்றவாறு. விவேக மில்லாதவர்கள் பயப்பட்டுச் சும்மா விருந்தாலும் அறிவுடையவர்கள் புலி புல்லைத்தின்னாது இது பொய் வேஷம் என்றறிந்து துரத்துவது போல். முனி வேஷம் பூண்டும் மோகத் தால் பெண்ணாசை அடங்காதவன் தவசியல்ல வென்று துரத்தி விடுவார்கள் என்பதாம். 1. ளைந்து மகத்தே என்பது பிறர் பாடம்