பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 42 திருக்குறள் (குறிப்பு . இது என்பது முதல் * பெண்ணாசை என்பது வரை காகிதச் சுவடியில் அடிக்கப்பட்டு என்னாதும் ஆசை என்பவை எழுதப்பட்டுள்ளன) 30– 2.74. தவமறைந் தல்லவை செய்தல் புதன் மறைந்து வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று என்பது மாயத்தினால் தபோ வேஷத்தைத் தரித்துத் கொண்டு அந்த வேஷ மஹிமை"யினாலே தபத்திற் கேலாத" காரியங் களைச் செய்தல், வேடன் புதருக்குள் தழையால் தன்னை மறைத்துப் பட்சிகளைப் பிடிப்பது" போல் என்றவாறு. தப சுக்கு ஏலாத" காரியமாவது, காமக்குரோத லோபங்களுடனே கூடிப் பரஸ்த்ரீ பரதனங்களைத் தன் வசமாகப் பண்ண நினைக் கிறது. (குறிப்பு 1. மாயத்தினால் தபோ - தவசு 2. மஹிமை ட வலிமை; 3. கேலாத - கேறாத, 4. புதருக்குள் தழையால் தன்னை மறைத்து - செடிக்குள்ளே மறைந்திருந்து; 5. பிடிப் பது - பிடிக்கிறாப், 6. ஏலாத - ஏறாத என்றிங்கனம் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.) அ 2.75. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும் என்பது தன்னைப் பிறர் பெரியவ னென்று சொல்லிக் கொள்ள வேணுமென்று நான் ஆசை யற்றவன்' என்று சொல்லுகிற வனுடைய பொய்யொழுக்கம், அப்போதைக்கு நன்றாயிருந் தாலும், பிறகு அறியாமற் சொன்னோமென்று தானே விசாரப் படத்தக்கதாக அவனுக்கு அநேகம் துக்கங்களைத் தரும் என்ற வாறு. சிறியதாய இன்பத்தைக் கருதிப் பெரியதாகிய பொய் வார்த்தையினாலே வெகுபாபம் வந்து, மறுபிறப்பிலே நரகத்திலே பிறந்து துக்கங்களை அனுபவிக்கிறபோது, அப்போது அறியாமல் பாபத்தைக் கருதிப் பெரியதாய்ச் செய்தோம் என்றழுவார்கள் என்றவாறு. டு