பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 44 திருக்குறள் 279. கணைகொடிதி யாழ்கோடு செவ்விதாங் கன்ன வினைபடு பாலாற் கொளல் என்பது அம்பு செவ்வையா யிருந்தாலும் வெகுகொடுமையைச் செய்யும்; யாழ் வளைந்திருந்தாலும் நல்ல இசையைக் கொடுக் கும் அப்படிப் போல், தபசு பண்ணுகிறவர்களையும் வடி வினாலே நல்லவர்கள் பொல்லாதவர்கள் என்று எண்ணாமல் அவர் செய்கைகளினாலே நல்லார் பொல்லார் என்று அறிய வேண்டும் என்பதாம். சின் 280. மழித்தலு நீட்டலும் வேண்டா வுலகம் பழித்த தொழித்து விடின் என்பது தபசு பண்ணுகிறவர்களுக்குத் தலைமயிரைச் சிரைத்து மொட்டை யாக்குகிறதும் சடையாக்குகிறதும் செய்ய வேண்டாம் என்பதாம். பெரியோர்கள் தபசுக்கு ஆகாதென்று ஜி.நாகமத்துச் சொன்னவைகளைத் தாங்களும் கடிந்து விடுகிறதே செய்ய வேனும் என்றவாறு. மனசு சுத்தமாயிருந்தால் வேஷம் வேண் டாம் என்பதாம். ίύ (குறிப்பு: 1. Tநாகமத்து' என்பது கையெழுத்துச் சுவடியில் அடிக்கப்பட்டுள்ளது ) ஆக அதிகாரம் உல்அ; குறள் உளஅ0 இப்பால் 29 . கள்ளாமை என்பது, பிறருடைமையாயிருப்பது யாதொரு பொருளையும் அவரை வஞ்சித்துக் கொள்ளக்கருதாமை, நினைத்தலும் செய்த லோடொக்கும். இல்வாழ்கிற சம்சாரியானாலும் சுற்றத்தாா களுடனே விளையாட்டிற்காகவும் ஒரு பொருளைத் திருடிவைக் கிறதும் பாபத்திற்குக் காரணமாதலால், அதுவும் செய்யலாகாது