பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 145 தபசியான பேர்களுக்குக் களவை நினைத்தாலும் பாபம் வரும்: ஆதலால் களவு ஒருத்தருக்கும் ஆகா தென்றவாறு. 281. எள்ளாமை வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் னெஞ்சு என்பது மோகூடி வீட்டை இகழாமல் வேண்டுவா னிவனென்று தவத் தோரால் நன்றாய் எண்ணப்படுபவன், யாதொரு பொருளையும் பிறரை வஞ்சித்துக் கொள்ள நினையாமலிருக்கிறவன் என்ற வா று. ஞானத்திற் கேதுவாகிய சாத்திரங்களானாலும் திருடலா காது என்பதாம். தி 28.2. உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக் கள்ளத்தாற் கள்வே மெனல் என்பது துறந்தவர்கள் பொல்லாத காரியங்களை மனத்திலே நினைத் தலும் பாவம்; ஆகையால் பிறர் பொருளை அவர்களறியாமல் வஞ்சனை பண்ணி எடுத்துக் கொள்ள வேணு மென்று நினை யாமலிருக்க வேணும் என்றவாறு. உ 283. களவினா லாகிய வாக்க மளவிறந் தாவது போலக் கெடும் என்பது களவினால் வருகிற பொருள் விருத்தி ஆகிறாப்போலே யிருந்து வகையறக் கெட்டுப் போம் என்றவாறு. வகையறக் கெடுதலாவது, திருடினவனுடைமையைக் கண் டால் ராசாங்கத்தார் அவனுடைமையெல்லாம் எடுத்துக்கொள் 1. இதற்கடுத்து 'காரணம் காரியம் என்றிரண்டு விதக்களவையும்' என்பது அச்சுநூலில் காணப்படுகிறது