பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 14 W 287. களவென்னுங் காரறி வாண்மை யளவென்னு மாற்றல் புரிந்தார்க ணில் என்பது களவு எனப்பட்ட கபட மனசு அளவறிந்தார்களிடத்தில் இல்லை என்றவாறு. அளவாகிறது, உலகப்பிரமாணங்களையும் சீவஸ்வரூபத்தை யும் யோகஞானங்களையும் அறிந்து அதனால் பலனாகிய வீடு பேற்றை அறிகிற தென்பதாம். T 288. அளவறிந்தார் நெஞ்சத் தறம்போல நிற்கும் களவறிந்தார் நெஞ்சிற் கரவு என்பது * உலகம் முதலானதுகளைப் பிரமாணங்களால் அறிந்தவர் கள் நெஞ்சிலே தர்மம் நிலையாய் இருக்கிறாப்போல், களவையே பயின்றவர் நெஞ்சிலே வஞ்சனையும் நிலையாய் இருக்கும் என்ற வாறு . உயிர்முதலானதுகளை அறிந்தவர்களுக்குத் துறவறம் சலி யாமல் நிற்கும் என்பதாம். تلے | 2.89. அளவல்ல செய்தாங்கே வீவர் களவல்ல மற்றைய தேற்றா தவர் என்பது களவு செய்ய அறிந்தவர்கள் அந்தப் பொல்லாத நினைவு களை நினைத்த போதே கெடுவார்கள் என்றவாறு. பொல்லாத நினைவுகளாவன: பொருளுடையாரை வஞ் சிக்குமாறும், வஞ்சனையால் கொடாததைக் கொள்ளுமாறும், அதனால் பலன்களை அனுபவிக்குமாறும் முதலாயின என்ப தாம். 4Rh 1. முதலானவற்றை. 2. உயிர்முதலானவை- ஷட்திரவியம்; குறள் 249க்குரிய குறிப்புாை காண்க. 3. கொடாததைக்' என்பது அது என்று பிறரால் திருத்தப்பட்டுள்ளது: (பரிமேலழகருரை காண்க.)