பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 48 திருக்குறள் 29 0. கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத் தள்ளாது புத்தே ளுலகு என்பது களவு செய்கிறவர்களுக்குத் தங்கள் உடம்பும் துணிந்து போம்; களவு செய்யாதவர்கட்குத் தேவலோகம் தப்பாமல் வரும் என்றவாறு. உடம்பு துணிந்து போகிறதாவது, திருடினவனை அரசர்கள் தண்டித்துக் கையைக் காலை அறுப்பர் என்பதாம். ஆக அதிகாரம் உல் கூ குறள் உள சுல் இப்பால் 30. வாய்மை என்பது, காமமும் பொருளும் வேண்டிப் பொய் சொல்லுகிறதை விலக்கிச் சத்தியமாய் இருக்கிற நன்மையைச் சொல்லுகிறது. 29 I. வாய்மை எனப்படுவதி யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல் என்பது மெய்யென்று சொல்லுகிறது எது என்று கேட்டால், பின்னை ஒரு சீவனுக்குச் சற்றும் பொல்லாங்கு வாராத சொற் களைச் சொல்லுதல் என்றவாறு. சீவன்களுக்குப் பொல்லாங்கு வரச் சொல்லுகிறது தப்புரை என்பதாம். தி 29 2. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதிர்ந்த நன்மை பயக்கு மெனின் என்பது குற்றமில்லாத நன்மையை உண்டாக்குகிறதானால் பொய் யான வார்த்தையும் மெய்யாம் என்றவாறு. குற்றம் தீர்ந்த நன்மை யாவது தருமம். * அதனைப் பயத்த