பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 திருக்குறள் மனத்தொடு வாய்மை மொழியிற் றவத்தொடு தானஞ் செய்வாரிற் றலை என்பது 2 9 5. ஒருவன் தன் மனத்துக்குச் சரிபோக மெய் சொல்லுவானா கில், அவன் தபசும் தானமும் பண்ணுகிறவர்களைப் பார்க்கிலும் பெரியவன் என்றவாறு. மன சுடனே கூடிச் செய்கிற காரியமே பலனுடையதாம் என்பதாம். டு 296. பொய்யாமை யன்ன புகழில்லை பொய்யாமை' யெல்லா வறமுந் தரும் என்பது ஒருவனுக்குப் பொய் சொல்லாம லிருக்கிறத்தை’ப் போலக் கீர்த்தியில்லை; அந்தச் சத்திய விரதமே மறுமைக்கு வேண்டிய செல்வங்களைக் கொடுக்கப்பட்ட சகல தர்மங்களையுங் கொடுக்குமென்றவாறு. இல்லறத்துக்குப் பொருள் தேடுகிற வருத்தமும், துறவறத்துக்கு உண்ணாமலிருக்கிற வருத்தமும் அனுபவியாமல் இந்த இரண்டு வகை யறமும் தானே வருமென்பதாம். அள் 297. பொய்யாமை பொய்யாமை யாற்றின் அறம்பிற செய்யாமை செய்யாமை நன்று என்பது ஒருவன் பொய்யாமையாகிய சத்திய விரதத்தைத் தப்பாமல் செய்ய வல்லவனானால் அவன் பின்னை வேறு தருமங்களைச் செய்ய வேண்டாம்; பல தருமங்களையும் செய்கிற வருத்தத்தி னாலே சில தப்பினால் குற்றம் வரும்; ஆதலின் சகல தருமங்க ளையும் கொடுக்கப்பட்ட சத்தியத்தைச் சொல்ல வேணும் என்பதாம். ĶT (குறிப்பு: 'பலதருமங்களையும்' என்பது முதல் உள்ளவை காகிதச் சுவடியில் அடிக்கப்பட்டுள்ளன.) 1. எய்யாமை என்பது பிறர் பாடம் 2. இருக்கிறதைப் .ே கொடுக்கும் 4. அறத்தின் பயனும் என்பது அச்சுநூல்