பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 5 o' வலியார் எளியார் சமானர் என்று சொல்லப்பட்ட மூவரிடம் திலேயும் கோபமாகாது என்பதாம் ДП — 304. நகையும் உவகையும் கொல்லும் சினத்திற் பகையு முளவோ பிற என்பது முகத்திலே நகையையும் மனத்திலே சந்தோஷத்தை யும் கொடுக்கப்பட்ட கோபத்தைப் போலப் பகையான தொன்றில்லை என்றவாறு. துறந்தவர்க்குப் புறப்பகை இல்லையாயினும் சினம் உட் பகையாய் நின்று நற்குணங்களைக் கெடுத்துப் பிறவித்துன்பங் களை எய்துவிக்கும் என்பதாம். ஆகையால் அவருக்குக் கோபத்தை விடப் பெரியபகை இல்லை என்பதாம். அF 3 05. தன்னைத்தான் காக்கிற் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம் என்பது தன்னைத் துக்கப்படாமல் இருக்கக் காத்துக் கொள்ள வேணுமென்று நினைத்தால் தன்மனத்திலே கோபம் வராமல் காக்க வேணும்; கோபம் வந்தால் அது தன்னைத் தானே கெடுக்கும் என்றவாறு. தன்னைக் கெடுக்கிறதாவது, துறந்தவர்களானாலும் பிற ரைச் சபிக்கிறதனாலே தபசு கெட்டுப் போய்ப் பிறவித்துன்பங் களை உண்டாக்கும் என்பதாம். டு 306. சினமென்னுஞ் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் ஏமப் புணையைச் சுடும் என்பது கோப மென்கிற நெருப்புத் தன்னைச் சேர்ந்தவனைக் கொல்லுகிறதல்லாமல் அவனுக்கு இனமான பேரையும் கெடுத் துப் பகையாக்கும் என்றவாறு.