பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

154 திருக்குறள் சினமானவனை ச் சுடுகிறதாவது, அவன் மனத்தைப் பேதிக் கப் பண்ணிப் பகையாக்கும் என்பதாம். சின் 307. சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று என்பது கோபத்தை நமக்குப் பொருளென்று நினைத்துக் கொண்ட வனுக்குக் கேடுவருகிறது, தரையை அடித்தவன் கை தப்பாமல் நிலத்திலே படுகிறாப் போல் தப்பாமல் கேடுவரும் என்றவாறு. Ст 308. இனரெரி தோய்வன்ன இன்னா செயினும் புணரின் வெகுளாமை நன்று என்பது மெத்த எரிகிற நெருப்பிலே விழுந்தாற்போ லொத்த பொல்லாங்குகளை ஒருவன் செய்தாலும், அவனைக் கோபித்துக் கொள்ளாமல் இருக்கிறதே நல்லது என்றவாறு. கோபம் வராமல் அடக்கினால் வேண்டிய காரியங்களை யெல்லாம் முடிக்கலாம். இம்மையிலே கீர்த்தியும் மறுமையிலே தேவலோக போகங்களையும் பெறலாம். السلے 309. உள்ளிய வெல்லாம் உடன்எய்தும் உள்ளத்தால் உள்ளான் வெகுளி யெனின் என்பது தன் மனத்திலே நினைத்த தெல்லாம் நினைத்தபடியே வந்து கைக்கூடும், மனத்திலே கோபத்தை நினையாமலிருந்தால் என்றவாறு. கோபம் அடங்கினவனுக்கு இம்மை மறுமைப் பயனும் மோrமும் எய்தும் என்பதாம். #F 1. தெல்லாம் என்பதே சரியான பாடம்