பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 55 310. இறந்தா ரிறந்தா ரனையர் சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை என்பது அதிகமான கோபத்தை யுடையவன் உயிருடனே இருந் தாலும் செத்தவனோ டொப்பான்; கோபத்தைக் கடிந்தவன் சாகிறவனே யானாலும் நெடுங்காலம் இருக்கிறவனோடு ஒக்கும் என்றவாறு. கோபத்தை உடையவனுக்கு ஞானம்பிறவாது; கோபத்தை விட்டவனுக்கு ஞானம்பிறந்து அதனாலே மோக்ஷம் அடைந்து நெடுங்காலம் நிற்கும் என்பதாம். μ) ஆக அதிகாரம் கூடுக க்குக்குறள் கூளய (இப்பால்) 32. இன்னா செய்யாமை என்பது, தனக்கு ஒருபயனை நோக்கியாதல் கோபம் பற்றி யாதல் ஒரு சீவனுக்கும் பொல்லாப்புச் செய்யாமலிருக்கிறது. 311. சிறப்பினுஞ் செல்வம் பெறினும் பிறர்க்கின்னா செய்யாமை மாசற்றார் கோள் என்பது பெரியதாகிய செல்வங்களைப் பெறலா மாயினும் பிறருக் குப் பொல்லாங்குகளைச் செய்யாமல் இருக்கிறது, குற்ற மற்ற பெரியவர்கள் செயல் என்றவாறு. பிறருக்குப் பொல்லாங்கு செய்து செல்வம் பெறுகிறதிலும், அதனைச் செய்யாமல் தரித் திரனாய் இருக்கிறது நல்லதென்பதாம். தி 312. கறுத்தின்னா செய்தவர் கண்ணும் மறுத்தின்னா செய்யாமை மாசற்றார் கோள் என்பது தன்மேல் கோபத்தினால் தனக்குப் பொல்லாத காரியங்களைச் 1. 'செய்தவக்' என்பது பிறர்பாடம்