பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 6 திருக்குறள் செய்தவனுக்குத் தான் திரும்பவும் பொல்லாத காரியங்களைச் செய்யாமலிருக்கிறது குற்றமற்றவர்கள் செயல் என்றவாறு உ 313. செய்யாமை செற்றார்க்கும் இன்னாத செய்தபின் உய்யா விழுமந் தரும் என்பது தானொருவனுக்குப் பொல்லாத காரியங்களைச் செய்யாம லிருக்கத் தன்மேற் கோபங்கொண்டு பொல்லாத காரியங்களைச் செய்தால், அது அவனுக்கு ஒருகாலத்திலேயுந் திராத துக்கத் தைக் கொடுக்கு மென்றவாறு. ЈН__ 314. இன்னா செய்தாரை ஒறுத்த லவர்நான நன்மையே’ செய்து விடல் என்பது தமக்குப் பொல்லாங்கு செய்தவர்களைத் தண்டித்தலாவது, அவர்கள் தாங்களே வெட்கித் தலையை தாழ்த்திக் கொள்ளத் தக்கதாக அவர்களுக்கு நன்மையே செய்து விட வேணும் என்ற வாறு. இப்படிச் செய்தால் இத்தகைய நன்மை செய்த பெரியவர் களுக்கு அறியாமற் பொல்லாங்கு செய்தோமே என்று தங்கள் மனதைத்தாமே நொந்து கொள்வார்கள் என்றவாறு. அ 315. அறிவினா னாகுவ துண்டோ பிறிதினோய் தன்னோய்’ போல் போற்றாக் கடை என்பது துறந்து வருத்தப்பட்டு அறிந்த ஞானத்தினாலே பலன் என்ன உண்டாம், பிற உயிருக்கு வருகிற பொல்லாங்கைத் தன்னு யிருக்கு வந்ததுபோலப் பார்த்துப் பரிகரியாமலிருந்தால் என்ற வாறு. = 1. செய்யாமல்' என்பது பிறர் பாடம் 2. "நன்னயஞ்’ என்பதே பிறர்பாடம் 3. "தந்நோய்' என்பது பிறர்பாடம்