பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 5 8 திருக்குறள் 3 I 8. தன்னுயிர்க் கின்னாமை தானறிவா னென்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல் என்பது பிறர் செய்த பொல்லாப்பைத் தான் அனுபவித்து அறிந்த வன் தன்னைப் போல் ஒத்த உயிர்களுக்குத் தான் பொல்லாங்கு செய்கிறது என்ன காரியம் என்றவாறு. தனக்குப் பொல்லாங்கு செய்தால் தான் துக்கப்படுகிறாப் போலப் பிற உயிர்களும் துக்கப்படும் என்று அறிந்து பொல்லாங்கு செய்யாமலிருக்க வேண்டு மென்பதாம். تلے/ 3 I 9. பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற் றமக்கின்னா பிற்பகற் றானே வரும் என்பது ஒருவன் பிற வுயிர்களுக்குப் பொல்லாத காரியத்தை காலத் தால் செய்தால் அவனுக்குப் பொல்லாங்கு அந்திக்குத் தானே வரும் என்றவாறு. சு 320. நோயெல்லா நோய்செய்தார் மேலவாம் நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர் என்பது பொல்லாத வியாதி முதலானவையெல்லாம் பிற வுயிர் களுக்குப் பொல்லாங்கு செய்தார் மேலேயாம்; அதனாலே தனக்குப் பொல்லாங்கு வேண்டாதவர்கள் பிறவுயிர்களுக்குப் பொல்லாங்கு செய்யாமலிருக்க வேண்டும் என்றவாறு. நிலத்தில் எந்த விதையை விதைத்தானோ அவன் அந்தப் பலனையே அடைவது போல், புண்ணிய பாவமாகிற நன்மை தீமைகளைச் செய்தவர்களும் அந்த அந்தப் பலனையே அடை வார்கள் என்பதாம். - D ஆக அதிகாரம் கூல்உக்குக்குறள் கூாஉா