பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 திருக்குறள் சாஸ்திரங்களிலே சொன்ன தருமங்களிலே முந்தின தரும மாவது, கொல்லாத தருமமே; அந்தத் தர்மத்தின் பிறகு பொய் சொல்லாமலிருக்கிறது நல்லதென்றவாறு. கொல்லா விரதமில்லாதவன் என்ன தர்மம் பண்ணினாலும் பலனில்லை யென்றவாறு. WFL 324. நல்லா றெனப்படுவதி யாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழு நெறி என்பது மோட்சம் பெறுகிறத்துக்கு' நல்லவழி யேதென்று கேட்டால், யாதொரு சீவனையும் கொல்லாம லிருக்கிறதே நல்ல நெறி யென்றவாறு. அ 325. நிலையஞ்சி நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை என்பது சம்சார நிலைக்குப் பயப்பட்டுப் பிறவாமையை வேண்டித் துறந்த வர்க்கு ளெல்லாம் கொல்லுதற்குப் பயப்பட்டுக் கொல்லாத தருமத்தைக் கைக்கொண்டு நடக்கிறவனே பெரியவன் என்றவாறு. டு 326. கொல்லாமை மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேற் செல்லா துயிருண்ணுங் கூற்று என்பது கொல்லாமை யாகிய விரதத்தைக் கைக்கொண்டு நடக் கிறவனுடைய உயிரை எமன் கொண்டு போக மாட்டான் என்றவாறு. அதிக மாகிய பாவங்களைச் செய்தவர்களும் அதிகமாகிய புண் ணியங்களைச் செய்தவர்களும் இம்மையிலே தானே அந்தப் பலன்களை அனுபவிப்பார்கள் என்பதாம். அள் 1. பெறுகிறதற்கு 2. சங்காரத்து' என்று காகிதச் சுவடியில் திருத்தப்பெற்றுள்ளது