பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 2. திருக்குறள் 'சீவன்களைக் கொன்ற பேர், பார்க்கப் போகாத வியாதியை யுடையவர்களாய்க் கைகால்கள் குறைந்து போகிற பெருவியாதி யும் நீசமான தொழில்களையு முடையவர்களாய்ப் பிறப்பார்க ளென்றவாறு. Τ) இப்போது பொல்லாத வியாதிகளை யுடையவர்கள் முற் பிறப்பிலே வெகு சீவன்களைக் கொன்று தின்றவர்க ளென்ற வாறு. T ஆக அதிகாரம் கயங் க்குக் குறள் கூளக ய. (இப்பால்) 34. நிலையாமை என்பது, தோற்றமாயிருக்கப்பட்ட செல்வம் புத்திரர் உற வின் முறையார் பெண்சாதி ஆடையாபரணம் முதலானது களை நில்லாதென்று அறிகிறது. இதுகளை நிலையென்று நினைக்கிறது, கானலைத் தண்ணிரென்று நம்புகிறாற்போலே யாகும், புத்திரமித்திர களத்திராதிகளை நன்றாய் விசாரித்துப் பார்த்தா லொன்றும் நிலையாயிருக்கிறதில்லை. இதுகளை." நிலையல்ல. வென்றறிந்தல்லாமல் ஞானம் பிறக்கிறதில்லை. ஞானமாகிய அறிவு பிறந்தாலல்லாமல் பற்றுவிட்டு நீங்கி வீடு பெற முடியாது. ஆதலால் சகல வஸ்த்துக்களையும் நிச்சயமல்ல வென்றெண்ண வேணு மென்பதாம். 331. நில்லாத வற்றை நிலையின வென்றுணரும் புல்லறி வாண்கை கடை என்பது நிலையில்லாத புத்திரமித்திரகளத் திராதிகளையும் செல் வங்களையும் நிச்சயம் என்றும், தனக்கு உதவும் என்றும் நினைக்கிறவர்கள் அறிவில்லாத மூடர்கள் என்றவாறு. நில்லாத வஸ்த்துக்களின்மேலே ஆசைவைக்கிறது பிறவித் துன்பத்துக்குக் காரணமாம் என்றவாறு. அ5 1. தோன்றுகிற 2: முதலானவைகளை நில்லா வென்று 3. இவைகனை