பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 65 338. குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே உடம்போ டுயிரிடை நட்பு என்பது முட்டையுடனே கூடியிருக்கிற உயிர் பக்குவம் வந்த போது அந்த முட்டையைப் போட்டுவிட்டுப் பறந்து போனாற்போலே, சரீரத்தில் இருக்கிற சீவனும் அந்தச் சரீரத்தை விட்டுப்போம் என்றவாறு. இப்படி நிலையில்லாத உடம்பை நிலை என்று நினைக் கிறவர்கள் அறிவில்லாதவர்கள் என்பதாம் تلے | 339. உறங்கு வதுபோலுஞ் சாக்கா டுறங்கி விழிப்பது போலும் பிறப்பு என்பது சீவன்சளுக்குச் சாவு வருகிறது, நித்திரை வருகிறாற் ப்ோலே இருக்கும்; பிறப்பு வருகிறது. நித் திரை போய் விழித்துக் கொண்டாற் போலாகும் என்றவாறு. துாங்குகிறதும் விழிக்கிறதும் சீக்கிரமாக வருகிறாற்போலச் சாவும் பிறப்பும் சீக்கிரமாக வருமென்பதாம். சின் 340. புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுட் டுச்சி லிருந்த வுயிர்க்கு என்பது வாயு பித்தம் சிலேஷ்மம் இவைகளாலே நிலைபெற்ற உடம்புக்குள்ளே யிருந்த உயிருக்கு எந்நாளும் இருக்கப்பட்ட ஒரு உடம்பு இல்லை; எந்த உடலை எடுத்தாலும் சரீரம் நாக மாகிப் போம்; சீவனுக்கு நாசமில்லை என்றவாறு. குறிப்பு:- 'எந்நாளும்' என்பது முதல் பின்வருமாறு காகிதக் சுவடியில் மாற்றி எழுதப்பட்டுள்ளது: 'இந்த உடம்பு எந்நாளும் இருக்கப்பட்ட வீடு; இந்த வீடும் நிலையல்ல வென்றவாறு. சீவனுடனே கூடி நிலையாய் இருக்கப் பட்டது ஒரு உடம்பும் இல்லை; எந்த உடலை எடுத்தாலும் சரீரம் நாசமாகிப்போம்; சீவனுக்கு நாசமில்லை என்றவாறு) ) ஆக அதிகாரம் வயசக்குக்குறள் கடளசய