பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 6 5 திருக்குறள் (இப்பால்) 35. துறவு என்பது புறமாகிய ஐஸ்வரியத்தின் கண்ணும் உள்ளாகிய யாக் கையின் கண்ணும் உண்டாகிய ஆசாபாசங்களை விட்டுத் தபசு பண்ணுகிறது. 341 யாதனின் யாதனி னிங்கியா னோத லதனி னதனி னிலன் என்பது ஒருவன் யாதொரு பொருளை விட்டு நீங்கினான் அந்தப் பொருளாலே அவன் நோகிறதில்லை என்றவாறு. நீங்குகிறது, ஒருபொருளைத் தனக்கு வேண்டாம் என்று விட்டுவிடுகிறது. அதனாலே நோகிறதில்லை. அந்தப் பொருள் அரசனாலேயாவது? கள்ளரா லாவது அக்கினியினா லாவது" தாயாதிகளினா லாவது போனால் விசாரம் வாராது என்பதாம். 4ே2. வேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி னிண்டியற் பால பல என்பது சகல வஸ்துக்களையும் துறந்துவிட்டால் அவனுக்கு இம்மை யிலே அந்த வஸ்துக்களாலே உண்டாக்கப்பட்ட பலனிலும் பத் துக் கோடி அத்தனைப்பலன் உண்டாம் மறுமையிலே என்ற வாறு. சம்சாரத்தை விட்டுத் துறந்து தபசு பண்ணினவனுக்கு மறு மையிலே வேண்டுமென்று நினைத்ததுகள்' எல்லாம் வந்து கூடு மென்பதாம். Hol. 4ே3. அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும் வேண்டிய வெல்லா மொருங்கு என்பது உடம்பு முதலாகிய ஐந்து பொறிகளுக்கு உரித்தாய் இருக்கிற ஐந்து புலன்களையும் கொடுக்க வேண்டும்: அவைகளைக் 1. நோகிறது. 2. ராசாவினாலே யாகுதல், 3. லாகுதல் சி. லாகுதல் 5. லாகுதல் - எனக் காகிதச் சுவடியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. 6. நினைத்தவை -