பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

170 திருக்குறள் 350. பற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு என்பது ஆசையாகிய பற்றை விடுகிறதற்குச் சகல ஆசா பாசங்களையும் அறுத்துவிட்ட ஜினேஸ்வரனுடைய பாதங்களையே பற்றாக நம்பி அவர் சொன்ன ஆகம சாஸ்திரத்தின் வழியே நடக்க வேண்டும்; அந்தப்படி நடவா விட்டால் ஆசை அறாது என்ற வாறு, ஆசை யுடைய தேவர்களை நம்பினால் அவர்கள் தங்க ளுடைய ஆசா பாசங்களை அறுக்க மாட்டாமல் இருக்கையிலே வேறொருவர் ஆசையை எப்படி அறுப்பார்கள் என்பதாம். ) ஆக அதிகாரம் கூ0டுக்குக் குறள் கனடு), (இப்பால்) 36. மெய்யுணர்தல் என்பது, பிறப்புக்களையும் மோட்சத்தையும் அவைகளை அடைய வேண்டிய காரணங்களையும் விபரீத வகையா லல்லா மல் உண்மையினாலே அறிகிறது. இதனையே தத்வக் ஞானம் என்றும் சொல்வார்கள் கிரந்த சரஸ்திரக் காரர். 351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் மருளானா மானாய் பிறப்பு என்பது மெய்ப்பொருள் அல்லாத புத்திரர் மித்திரர் களத்திரம் தனம் தானியம் வஸ்து ஆபரணங்கள் இவை முதலானவைகளை மெய்யென்று அறியப்பட்ட விபரீத உணர்வினாலே மயங்கிப் பிறப்பினாலே வெகு துக்கம் உண்டாம் என்றவாறு. விபரீத உணர்வாவது, மறுபிறப்பும் இருவினைப்பயனும் கடவுளும் இல்லை யென்று சொல்லும் பொய்ந்நூல் வடிக்குக் களை மெய்யென்று இருத்தல் இதனாலே பிறப்பு இடையறாமல் வறாமென்பதாம். அதி 1. "பின்னையொரு என்று திருத்தப் பட்டுள்ளது 1. "வஸ்திர' என்று மாற்றப்பட்டுள்ளது. 2. மனைவி 3. நண்பர்