பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 74 திருக்குறள் 360. காமம் வெகுளி மயக்க மிவைமூன்றி னாமங் கெடக்கெடு நோய் என்பது ஒருவனுக்கு ஆசையுங் கோபமும் மயக்கமும் என்று சொல் லப்பட்ட மூன்று குற்றங்களுடைய பேரும்கூட இல்லாமல் ஒரு வனுக்குக் கெட்டால்* அந்தக் குற்றங்களாலே வரப்பட்ட வாதை யவனுக்குண்டாகாதென்றவாறு. அனாதியாய் மயக்கமும், அந்த மயக்கத்தினாலே நான் என்னுமகங்காரமும், அகங்காரத்தினாலே எனக்கிது வேண்டு மென்னும் அவாவும். அந்த அவாவினாலே வரப்பட்ட ஆசையும், அந்த ஆசையினாலே யப்பொருள் பெறாவிடிற் கோபமும், இவை அஞ்சென்று கிரந்த சாத்திரத்தார் சொல்லு வர்கள். அதிலே அகங்காரத்தை மயக்கத்திலேயும், அவா ஆசையினிட த் திலேயும் அடங்குதலால் மூன்று குற்ற மென்றார்; இந்த முக் குற்றங்களும் கெட்டவனுக் கல்லது மோட்சமில்லையென்றவாறு. (D ஆக அதிகாரங்கள் குறள் H இப்பால் 37 அவாவனுத்தல் என்பது முன்னும் பின்னுந் தொடரப்பட்ட வினைத் தொடர்ச் சியை யறுக்கப்பட்டவர்களுக்கு நடுவு நின்ற உடம்பும் அத்துடன் கூடிய வினையினாலே பிறக்கப்பட்ட ஆசையும் பிறவிக்கும் வித்தாமாகலின் அதை சுறுக்கிறதாப்* 361. அவாவென்ப வெல்லா உயிர்க்கு மெஞ்ஞான்றுந் த.வா.அப் பிறப்பினும் வித்து என்பது எல்லாச் சீவன்களுக்கும் எந்தக் காலத்திலேயு மாசை யென்னப்பட்டதே பிறவிக்கு வினாயென்னப்பட்டதென்றவாறு.

  • கீழ்க்கோடிடப்பட்டவை அக்க நூலிற் கண்டுதிருத்தி எழுதப்பட்டன * கீழ்க்கோடிடப்பட்டது அச்சு நூல் பார்த்து திருத்தி எழுதப்பட்டதாம்

I - விதை