பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 திருக்குறள் ஒருவனுக்கு மோட்சமென்று சொல்லப்படுகிறது ஆசையில் லாமை; அந்த ஆசையில்லாமை மெய்மையை வேண்டிச் சத்தியமாய் நடந்தால் தானே வரு மென்றவாறு. மோட்சமாகிறது சீவன்மயக்கமில்லாமலிருக்கிறது. تفي 365. அற்றவ ரென்பா ரவாவற்றார் மற்றையா ரற்றாக வற்ற திலர் என்பது பிறப்புப் பிணிமுப்பு மரணங்களை யறுத்தவ ரென்று சொல் லப்படுவர்கள், ஆசையை யறுத்தவர்களே: ஆசையை விடாமல் மனை வாட்கை முதலானதுகளைத் துறக்காத பேர் பிறவியை யறாதவர்களென்றவாறு. ஆசையினாலே பிறப்பு மென்மேலு முண்டாமென்று. டு 366. அஞ்சுவ தோரு மறனே யொருவனை வஞ்சிப்ப தோரு மவா என்பது பயப்படத்தக்கது ஆசையே அந்த ஆசை சகல தர்ம விரதங்களைச் செய்தாலும் ஆசையுடையவனாயிருக்கிறவன் பிறவித்துன்பங்களிலே யழுந்து வானென்றவாறு. ஆசை சகல விரதங்களையும் அழிக்குமென்பது. הלל

367. அவாவினை யாற்ற வறுப்பிற் றவாவினை தான்வேண்டு மாற்றான் வரும் என்பது ஒருவ னாசையை நன்றா யறுத்துவிட்டானா கில், அவ லுக்கு ஒரு காலத்தினு மழியாத வினையாகிய மோட்சந் தப்பாமல் வரு மென்றவாறு. ஆசையற்றவனுக்கு நினைத்த கருமமெல்லாம் முடியுமென்ற வாறு . _ - 1, 2. குறிப்புரை காண்க 1. வாழ்க்கை 2. ஆசைக்கே என்பது காகிதச்சுவடி