பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

திருக்குறள்

இவ்வாற்றான் பாயிரப் பகுதி சைன சமயக் கோட்பாட்டிற்கேற்ப அமைந்தது என்று கொள்ளப் பெறும்.

கடவுள் வாழ்த்துப் பாடல்கள் பத்துள்ளும் காணப்படும் தொடர்கள் ஜைந சமயச் சார்புடையனவாம்.

முதற்குறளில் காண்பது ஆதிபகவன்: விருஷப தீர்த்தங்கரருக்குப் பிறகு இருபத்துமூவர் அவதரித்தனர். இவ்விருபத்து மூவர்க்கும் விருஷப தீர்த்தங்கரர் முதல்வர் ஆகையால், விருஷபதீர்த்தங்கரர் ஆதிபகவன் எனப்பட்டார். மேலும் இவர் கர்ம பூமியின் ஆதியில் மக்கள் உயிர்களுக்கு அக்ஷரம் கணிதம் (எழுத்தும் எண்ணும்) முதலானவற்றை உபதேசித்த ஆதி மூர்த்தி யாகையால் ஆதிபகவன் எனப்பட்டார்.

“விருப்புறு பொன் எயிற்குள்
விளங்கவெண் ணெழுத்திரண்டும்
பரப்பிய ஆதிமூர்த்தி”

- என்றும்,

“சொல்லிய யெழுத்தெண் ணெல்லாம்
தொல்லை நாள் எல்லையாக
நல்வகை யாக்கும் பிண்டி நாயகன்”

– என்றும் மண்டல புருடர் தம் நிகண்டு நாலாவது தொகுதியிலும், 12 ஆவது தொகுதியிலும் தெய்வ வணக்கத்தில் கூறியுள்ளார்.

“கோதிலருகன் திகம்பரன் எண்குணன் முக்குடையோன் ஆதிபகவன் அசோகமர்ந்தோன் அறவாழி அண்ணல்”

என்ற கயாதர நிகண்டு ‘ஆதிபகவன்’ என்று அருகனைக் கூறும். சிலப்பதிகாரம் (நாடுகாண், கானல் வரி, 177) “செறிவன் சிநேந்திரன் சித்தன் பகவன்” என்று கூறும். “ஆதி பகவனை அருகணை” என்பது திருக்கலம்பகம் (செ. 109) எனவே ஆதி பகவன் என்பது அருக தேவனையே குறித்தலைக் காண்கிறோம்.

இரண்டாவது குறளில் காண்பது வாலறிவன் என்பது ஆகும். “பகவன்” என்ற சொல்லுக்கு அடியார்க்கு நல்லார் “கேவல ஞானி” என்று உரை வகுத்துள்ளார். கேவல ஞானம் என்றால் முற்றறிவு என்பது பொருள். எனவே முற்றறிவுடையவனை