பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 & 5 திருக்குறள் 390. கொடையளி செங்கோல் குடியோம்ப னான்கு முடையானாம் வேந்தர்க் கொளி என்பது வேண்டினவர்கள் வேண்டின வஸ்த்துக்களைக் கொடுத்த லும், எல்லார்க்குந் தயை செய்தலும், முறைமை தப்பாமல் நடக்கிறதும். தளர்ந்த குடிகளைப் பேணுதலும் இந்த நான்கு குணங்களுமுடையவன் ராசாக்களுக் கெல்லாம் விளக்கா மென்ற வாறு. தயை செய்கிறது. முகமலர்ந்து நல்ல வசனங்களைச் சொல்லுகிறது. தளர்ந்த குடிகளைப் பேணுகிறது, ஆறிலொன்று கடமை கொள்ளுகிறதும் வறுமை நீங்கினாற் கைக்கொண்டும் வறுமையுற்ற வழி விட்டு விடனுமாம் િ ஆக அதிகாரம் கூ0க க்குக்குறள் கூளக) இப்பால் 40. கல்வி என்பது அரசனாலே கற்க வேண்டின நூல்களைக் கற்றல். நூலாவது அற நூலும் நீதி நூலும் யானை குதிரை ஆயுத வகைகள் என்றி வற்றின் நூல்கள் முதலாயின. அரசனறிவுடைய வனானால் தன்னுயிர்க்கே யல்லாமற் சகலமான ஜீவன்களுக்கும் பயன்படுவன். இந்தக் கல்வி யாவர்க்கு முறுதிபயத்தலிற் பொதுப்படக் கூறுகின்றார். 391. கற்க கசடறக் கற்பவை கற்றபி னிற்க வதற்குத் தக என்பது கற்க வேண்டின சாத்திரங்களைப் பழுதில்லாமல் நன்றாய்க் கற்க வேணும். அப்படிக் கற்றாலந்த நூல் சொன்ன வழியே நிற்க வேணு மென்றவாறு. கற்க வேண்டின நூலாவது, அறம் பொருளின்பம் வீடென்னு முறுதிப் பொருளை யறிவிக்கப்பட்ட நூல்கள்; இது வன்றி! 1. இவையன்றி