பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 8 9 39 5. உடையார்முன் இல்லார்போ லேக்கற்றுங் கற்றார் கடையரே கல்லா தவர் என்பது வருத்தப்பட்டாகிலுங்கற்கிறது நல்லது. கற்றால் அவர்கள் முன்னே கல்லாதவர்கள் நிற்கிறது எப்படிப்போலே என்றால், அயிசுவரியவான்கள் முன்னே தரித்திரவான்கள் ஏக்கற்று நிற் குறாப்' போலே, கற்றவர்களைப் பார்த்துக் கல்லாதவர்கள் நாணித் தலையிறக்கிக் கொள்ளுவார்களென்றவாறு. ஏக் கற்று நிற்கிறது, ஆசையாலே தாழ்ந்து நிற் குறதாம். டு 3.96. தொட்டனைத் துறு மணற்கேணி மாந்தர்க்குக் கற்றனைத் துறு மறிவு என்பது மணலிலே கிணறு எம்மாத்திர மாழந்தோண்டினால் அம் மாத்திரம் தண்ணிர் சுரக்கும், அப்படிப்போலே மனுஷர்களும் எம்மாத்திரம் நூலைக்கற்றாலும் அம்மாத்திரமறிவுண்டாமென்ற வாறு. சிறிது கற்று விடாமல் மென் மேலுங்கற்கவேண்டுமென்பதா யிற்று. சின் 397. யாதானு நாடாமா லூராமா லென்னொருவன் சாந்துணையுங் கல்லாத வாறு. என்பது கல்வியைக் கற்றவனுக்கு யாதொரு நாடுந் தன்னாடாம்: யாதொரு ஆருந்தன்னுாராம். இப்படியா கிற தறிந்திருந்துஞ் சாகிறபரியந்தங் கல்லாமல் நாளை விறுதாவிலே கழிக்கிறது என்ன காரியத்தினாலே யென்றவாறு. 事 கற்றவனுக்குத் தன்னாடுமூரும் போலப் பிறனாடு மூரும் பலன் கொடுக்கு மென்பதாம். Tெ 1. நிற்கிறாற்போலே. 2. நிற்கிறதாம்: 1. வீணாக