பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 96. திருக்குறள் செவியுணவாகிய கேள்வியினை நன்றாய்க் கேட்டறிந்தவர் கள், பூமியிடத்து மனிதரே யாயி னும்,அவியுண வினை யுடைய தேவரோ டொப்ப ரென்ற வாறு. அவியாகிய உணவு தேவர்களுக்கு ஒமத்தீயிற் கொடுக்கப் பட்டது. அறிவால் நிறைந்த பேர்களென்றுந் துன்ப மறியா ரா.கலின் தேவரோடொப்ப ரென்றுங் கூறினார், இப்பாட்டுக் கேள்வியுடையாரது சிறப்புக் கூறப்பட்டது. |Ħ!_ 414. கற்றில னாயினுங் கேட்க வஃதொருவற் கொற்கத்தி னூற்றாந் துணை என்பது உறுதியாகிய நூல்களைத் தான் கல்லாத போதுங் கற்றறிந்த பெரியோர்களிடத்திலே கேட்டறிந்திருக்கில், அது அவனுக்கொரு தளர்ச்சி வந்த விடத்து ஊன்று கோலா மென்றவாறு. தளர்ச்சி, அறிவில்லாமையாலுந் தரித்திரத்தினாலுந் துன்பப் பட்டு மனந்தளர்தல்; அந்தத் தளர்ச்சியைக் கேள்வி நீக்கு மாகலின் ஊன்றுகோலா மென்றார். P 415. இழுக்க லுடையுழி யூற்றுக்கோ லற்றே யொழுக்க முடையார்வாய்ச் சொல் என்பது வழுக்கு த லுடைய சேற்று நிலத்து நடந்து போவாற்கு ஊன்று கோலுதவுவதுபோல், ஒழுக்கமுடைய கற்றறிந்த பெரியோர் களாற் கேட்டறிந்தவர்களுக்கு அந்தக் கேள்வியொருகாலத்துந் தவறு வராமற் காக்குமென்றவாறு. கல்வி யுண்டாயிருந்தும் ஒழுக்கமில்லாத பேர்கள் அறிவில்லா ராதலின் அவர்கள் சொல்லைக் கேட்கப் படாதென்பது தோன்ற ஒழுக்கமுடையார் வாய்ச்சொல் என்றார். ஒழுக்க மாகிய ஆசாரமுடைய பெரியவர்கள் வாய்ச் சொல்லே கேட்ட றிய வேண்டு மென்பதாம். டு