பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை I 97 416. எனைத்தானு நல்லவை கேட்க வனைத்தானு மான்ற பெருமை தரும் என்பது ஒருவன் நல்ல ஆசாரமுடைய பெரியோர்க ளிடங்களிலே யுறுதி யான நூல்களைச் சிறிது கேட்டிருந்தானாயினு மந்தக் கொஞ் சங் கேட்ட பொருளே யவனுக்கு நிறைந்த பெருமையைத் தருமென்றவாறு. நல்ல கேள்வி கொஞ்சங் கேட்டிருந்தாலும், அது மழைத் துளிபோல் நிறைய வந்துதவிச் சகலமும் கற்றவ னென்றென் பிக்கு மென்பதாம். அச 417. பிழைத்துணர்ந்தும் பேதமை சொல்லா ரிழைத்துணர்ந் திண்டிய கேள்வி யவர் என்பது நூல்களின் பொருள்களை நன்றாக வாராய்ந்தறிந்த பெரியோ ரிடத்திற் கேட்கப்பட்ட கேள்வி சிறிதாயினும், நல்ல கேள்வித் திறமை யுடையவர் தமக்குக் குற்றம் வரத்தக்க சொற்களைச் சொல்லா ரென்றவாறு. ஒரு காலத்திற் தாமத குணத்தான் மயங்கினா ராயினும் அவ்வா றல்லது சொல்லா ரென்பதாம். இந்த நான்கு பாட்டினாலுங் கேட்டாற்கு வரும் நன்மை களைச் சொல்லப்பட்டது. QET 4 18. கேட்பினுங் கேளாத் தகையவே கேள்வியாற் றோட்கப் படாத செவி என்பது நல்ல சாத் திரங்களாற் பெரியோரிடத்திற் கேள்வியைக் கேளாத செவி நல்ல செவியல்ல, செவிடான செவி யென்றவாறு. 1. "கேழ்ப்பினுங்' என்று காகிதச் சுவடியில் காணப்படுகிறது.