பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

திருக்குறள்

ஏழாவது திருக்குறளில் கண்ட தனக்குவமையில்லாதான் என்ற தொடர் ஆசார்ய ஶ்ரீ குந்த குந்தர் தாம் பிராகிருத பாஷையில் இயற்றிய “சமயசாரம்” என்னும் நூல் கடவுள் வணக்கம் கூறுங்கால் “அணோ வமம்” (உவமையில்லாதவன்) என்ற தன் மொழி பெயர்ப்பாகவே கருதப்பெறும்.

எட்டாவது குறளில் கண்ட அறவாழியந்தணன் என்பது அருகனுகே கேயுரியது “அறவாழியண்ணல் இவன் என்பார்” என்பது சீவக சிந்தாமணி செ. 1611 “அருளோடெழும் அறவாழி யப்பா” என்பது திருநூற்றந்தாதி செ. 7. “அறவாழி கொண்டே வென்ற அந்தணனே” என்பதும் அந்நூல் செ. 27 கயாதரம், “அறவாழியண்ணல்” என்பதை ஜிநேசவரருடைய பெயர்களுள் ஒன்றாகக் குறிப்பிடுகின்றது.

ஒன்பதாவது குறளில் கண்ட “எண் குணத்தான்” என்பது எட்டுக் குணங்களையுடைய சித்தபரமேஷ்டியைக் குறிக்கும். “பண்ணவன் எண்குணன் பாத்தில் பரம் பொருள்” (சிலப்-நாடு 18) “இரு நால்வினை கெடுத்து எண் குணனுமெய்தி” 'ஜீவசம்போதனை 1 இல்லை); “இறைவனீ ஈசனீ எண்குணத் தலைவனீ” (மேருமந்த்தர புராணம் செ. 1000) ஆகிய மேற்கோள்களால் அருகன் எண்குணனாதல் உறுதியெய்தும்.

இதுகாறும் கண்ட மேற்கோள்களால் கடவுள் வாழ்த்தில் கண்ட கடவுளைப்பற்றிய தொடர்கள் யாவும் அருக சித்த பரமேட்டிகளையே — ஜிநரையே குறித்தலால், திருக்குறள் ஆசிரியர் ஜைநர் ஆதலே உறுதி யெய்தும்.

“நீத்தார் பெருமை” - யென்ற மூன்றாவது அதிகாரத்தின் முதற்குறள்,

“ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பணிவற் றுணிவு”

- என்பதாகும். “பரமாக மத்தின் துணிவு, நீத்தாருடைய பெருமை மேலான பத்துத் தரு மங்களை வேண்டும்” - என்பது இக்குறட்குக் கர்ண பரம்பரையாக ஜைநர் கூறும் உரையாகும். விழுப்பத்து - உத்தமமாகிய