பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 0 திருக்குறள் அறிவே யாதலின், உயிர்கட்கு உறுதியான பொருளறிவென்ப தாம்.

  • _

423 எப்பொருள் யார் யார் வாய்க் கேழ்ப்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு என்பது யாதொரு பொருளை யாவர் யாவர் சொல்லக் கேட்டா அலும், அந்தப் பொருள்களில் நல்ல பொருளைக் கைக்கொண்டு நடக்கவல்ல தறிவென்றவாறு. மனிதற்குக் குணங்கள்'மாறி மாறி வருதல் சுபாவமான படி யினாலே நல்லபொருளைப் பொல்லாதவர் வாயாற் கேட்கிலும் பொல்லாதபொருளை நல்லவர் சொல்லக்கேட்கிலும், உறுதி யாகிய பொருள் பகைவர் வாயிற் கேட்கிலும், கெட்டபொருள் சினேகிதர் வாயிற் கேட்கிலும், அதனை அவர்கள் குணதோஷங் களாற் சொன்னாரென்றறிந்து அக்காலத்துக்கேற்றபடியே நடத்தலறிவென்பதாம். ol. 424. எண்பொருள வாகச் செலச்சொல்லித் தான்பிறர்வாய் நுண்பொருள் காண்ப தறிவு என்பது தான் சொல்லப்படா நின்ற பொருள்க ளரிதாயினும்" அதனை எளிய பொருள் போலக் கேட்போர்கள் மனங்கொள் ளச் சொல்லிப் பிறர் வாயாற் கேட்கப்படா நின்ற சொற்களில் துட்பா நுட்பம் தெரிந்து பொருள்களைக் காண வல்லதே அறிவு என்றவாறு.* சொல்லுகிற வசனங்களைத் திருத்தமாகச் சொல்லிக் கேட் கிறவர்கள் வழுவச் சொன்னாலும் அதனுடைய பொருள்களைக் காண வேண்டு மென்பதாம். அா ___ 1. "கேட்பினும் என்க.

  • . குணமூன்றும் என்பது அச்சுநூல் 3. சுபாவமானபடியினாலே நல்ல ஒபாருளை - அச்சு துரலினின்று சேர்க்கப்பட்டன. 4. அரியவாயினும் க. அவற்றை 'முதல் "வரையுள்ளவை அச்சு நூலினின்று எடுத்துச் சேர்க்கப்

பட்டவை ந ==