பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 திருக்குறள் அறிவுடையா ராவார் தமக்கு மேல் வருங் காரியங்களை யறிய வல்லவர்; அறிவில்லாத பேர்களாவார் அதனை முன்னறிய மாட்டாதா ரென்றவாறு. முன்னறிதல் முன்னே யெண்ணி யறிதல்; அறிவில்லாமை யாவது வந்த பிறகு அறிதல். இT 428. அஞ்சுவ தஞ்சாமை பேதமை யஞ்சுவ தஞ்ச லறிவார் தொழில் என்பது அஞ்சப்படுவதனை யஞ்சாதிருத்தல் பேதமை யாம். அஞ் சத்தக்க காரியங்களுக்குப் பயந்து நடத்தல் அறிவுடையோர் தொழிலா மென்றவாறு. பாவம் பழி கேடு முதலானவை அஞ்சப்படுவன. அஞ்சாமை, எண்ணாது செய்து நிற்றல்; அஞ்சுதல், எண்ணித் தவிர்தல். இது காரியமல்ல வென்றிகழப் படாதென்று சொல்லுவர் அறிவுடையோ ரென்பதாம்'. تھے۔ | 429. எதிரதாக் காக்கு மறிவினார்க் கில்லை யதிர வருவதோர் நோய் என்பது தமக்கு வருந் துன்பங்களை முன்னே யறிந்து வராதபடி காத்துக் கொள்ள வல்ல அறிவுடையார்க்கு ஒரு காலத்திலும் அவர் பயப்படத்தக்க துன்பம் வருவதில்லை யென்றவாறு. இதனாற் காக்கலாங் கால மறியப்பட்டது. வருங்கால மறிந்து விலக்கவே அவற்குப் பொல்லாங்கு வராதென்பதாம் BF 430. அறிவுடையா ரெல்லா முடையா ரறிவிலா ரென்னுடைய ரேனு மிலர் என்பது - = I. பேதைமை 1. சொல்லுவார் "அறிவரர் தொழில்' என்றார்-என்று அச்சுநூலில் உள்ளது.