பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 திருக்குறள் அறிவுடையார், நீதியையும் உலகியலையு மறிந்த பெரி யோர். திறனறிதலாவது, பெரியோர்களை யறிந்து கொண்டாடு தல் வணங்குதல் தனதான்னியங்கள் முதலானதுகளிலே சகா யம் பண்ணுதல். தி 442 உற்றநோய் நீக்கி புறா.அமை முற்காக்கும் பெற்றியார்ப் பேணிக் கொளல் என்பது தெய்வத்தால் மனிதரால் தனக்குவந்த பொல்லாங்குகளை நீக்கு முபாய மறிந்து நீக்கிப்பின் அப்படி வராமல் முன்னே யறிந்து காக்கவல்ல அறிவுடைய பெரியோரை அவர்கள் மனசு சந்தோஷ மாகும் படிச்செய்து துணையாகக் கொள்க வென்றவாறு. தெய்வத்தால் வருந்துன்பங்களாவன, மழையில்லாமற் போகை மிகுத்துப்பெய்தல் தீ பிணி; இது முதலான கேடுகள் வந்த காலத்துத் தெய்வங்களுக்குப் பிரார்த்தனை செய்து ஒப. சாந்தி போசனங்களால் நீக்கப்படும். மனிதரால் வரும் துன்பங் களாவன, பகையாளியன் திருடர் உறவின் முறையார்களால் வந்த குற்றம். இதுகளுக்குச் சாமபேத தானதண்டங்களாகிய நாலு வகையுபாயங்களினால் விலக்கப்படுவன. வருவதன் முன்னே காத்தலாவது, தெய்வங்களால் வருமவற்தை யுற்பாதங்களா லறிந்து சாந்திகளாற் காத்தலும், மனிதரால் வரப் போற: பகையை அவரவர் மனங்களையறிந்து சினேகமாக்கிக் காத்தலு மாம். இப்படிப்பட்ட குற்றங்களை வராமல் காக்கவும் வந்தால தனைப்" பரிகரிக்கவும் வல்ல மந்திரி புரோகிதர் முதலான அறி வான் மிகுந்த பெரியோரைத் துணையாக்கிக் கொள்ள வேண்டு தலே ராசக்கள் முதலான பேர்களுக்கென்பதாம். 2– 4.43. அரியவற்று ளெல்லா மரிதே பெரியாரைப் பேணித் தமராக் கொளல் என்பது 1. இவை 2. இவற்றுக்கு 3. போற போகிற 4. கார்க்கவும் என்று காகிதச் சுவடியிலுள்ளது 5. அவற்றை