பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான் சேர்ந்த வினங்களாலே யறிவு திரிந்து அந்த வினங் களுடைய வறிவே வர்த்திக்கு மென்றவாறு. தண்ணிர் நல்ல நிலத்தைச் சேரவே நல்ல ருசியாயிருக்கும். மனிதரும் நல்ல அறிவுடையாரைச் சேரவே நல்ல அறிவுண்டாம். பொல்லாத வினங்களை யொருகாலத்திலும் அறிவுடைய பேர்கள் சேரலாகா தென்றவாறு. ED– 453. மனத்தானா மாந்தர்க் குணர்ச்சி யினத்தானா மின்னா னெனப்படுஞ் சொல் என்பது உலகத்து மனிதர்க்குப் பொதுவான வறிவுதம் மனங் காரணமாக உண்டாம்; சகல செனங்களாலும் நல்லவன் பொல்லாதவ னென்கிற பேர் தங்களைச் சேர்ந்த இனங் காரணமாக உண்டா மென்றவாறு. சுபாவமான அறிவுடையவன் நல்லினங்களைச் சேரின் அச்சேர்க்கை நல்ல அறிவு கொடுத்து இம்மை மறுமைக்குப் புகழும் புண்ணியமு முண்டாக்கும். தீயவினங்களைச் சேரில் நாள் தோறும் தன்னுடைய நல்ல அறிவு கெட்டுப் பொல்லாத குணமாய்க் கெடுத்துவிடும். ஆகவே ஒரு காலத்தினுஞ் சிற்றினங் களைச் சேர லா காதென்பதாம். IH. 454. மனத்து ளதுபோலக் காட்டி யொருவற் கினத்துள தாகு மறிவு என்பது நல்ல விசேஷமாகிய அறிவுடன் கூடியிருந்த பேர்களிடத்திற் சிற்றினமாகிய தூர்த்தர் கூடவே யிவனுடைய நல்ல வறிவும் அந்த வினங்களறிவுடனே கூடிவிடு மென்றவாறு. 1. தெரிந்து’ என்று காகிதச் சுவடியிலுள்ளது. 2. இருக்கும். 1. அச்சுநூலிற்கண்டது