பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

20

திருக்குறள்

“பிண்டியும் குடையுஞ்சிய வளையுஞ்சா மரையு மற்றும் அண்டவர்க் கிறையமைத்தான் அன்னவர்க்குரிய வாற்றான்”

எனவும் வரும் மேருமந்தர புராணம் 1386 மற்றும் 389 ஆம் செய்யுட் பகுதிகளால் அறியப் பெறும்.

இங்ஙனம் இந்திரனுக்குப் பெருமை தேடித் தருவதாக ஜைந சமயத்தில் கூறியிருக்கப் பரிமேலழகர், சாபமெய்தியவாற்றை இந்திரனோடு தொடர்பு படுத்திக் கூறியது பொருந்தாதென்று கூறும் ஜைநர் கூற்றுச் சிறந்திருத்தல் கண்கூடு.

“செயற்கரிய” என்ற குறளில் செயற்கரியவாவன தானம், தருமம், விரதம், தபசு என்பனவாம். இத்திறம் ஜைந சமயக் கோட்பாட்டுக்கே உரித்தாதல் உறுதி. மேலும்,

“அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்” 30

- என்ற குறள்

ஜைநசமயக் கோட்பாட்டுக்குரியதாகவேயுளது என்பது ஜைநர் கொள்கை. இதில் கூறப்பட்ட அந்தணர் என்பது வருணாசிரம தருமத்தைக் கடைப்பிடிக்கும் பிராமணரைக் குறிக்காது. ஜைநர்கட்குரிய ஶ்ரீபுராண நூலும் கூறப்பட்ட பிராமணர் அல்லது அந்தணர்களைக் குறிக்கும்; ஒருவன் பிறப்பினால் பிராமணன் ஆகான்; குணத்தாலே தான் ஆவன் என்பதை இக்குறள் கூறுகிறது. பரத சக்கரவர்த்தி ஆட்சி செய்யுங்கால் தாம் ஈட்டிய வொண்பொருளைத் தானம் செய்ய வெண்ணி ஷட்கர்மத் தொழில்களிலே ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துக் கொண்டு பெளர்ணமி நாளில் வருக என்று நரபதிகளுக்கு ஆணை பிறப்பித்தான்; அந்த நாளில் நன் மலர்களையும் மொட்டுக்களையும், தளிர்களையும் கனிகளையும் தன் அரண்மனை வெளியில் பரப்பினான். அரசர்கள் பரிவாரங்களுடன் அரண்மனையுட் புகுந்தனர். மகாஜனங்களை வெளியே நிறுத்தினர். பரத சக்கரவர்த்தி மகா ஜனங்களை உள்ளே வருமாறு பணித்தார், சிலர் உட்புகுந்தனர். சிலர் வரவில்லை. வராத சிலரை வேறுவழியால் அரசாணையின்படி அழைத்துச் சென்றனர். சக்கரவர்த்தி அவர்களைப்பார்த்து