பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 I 8 = திருக்குறள் செய்யுற பேர்களுக்கு அதுவும் விலக்கலாமென்பது பெற்றாம். Fட 464. தெளிவி லதனைத் தொடங்கா’ரிளிவென்னு மேதப்பா டஞ்சு பவர் என்பது நல்ல இனத்துடனே தனித்தும் ஆராய்ந்தும் துணிதலில்லாத காரியங்களைச் செய்யார், நல்ல பேர்கள் தமக்கு இளிவரவாகிய குற்றம் வரப்போகுதென்று அஞ்சி நடப்பவரென்றவாறு. செய்யத் தொடங்கவே' நடுவே குற்றம் வருமென்று யோசனையில்லாத காரியங்களைச் செய்யாரென்பதாம். శ్రిF 465. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு என்பது ராசாக்கள் முதலான பேர்கள், பகைவர்மேற் செல்லுங் காலத்து, இந்த வேளை பகையாளிகள் மேற்போனாலிப்படி யாம்' என்குறத்தை நன்றாக ஆராய்ந்தறியாது. சிறிது ஆலோ சனை யானவுடனே போனால் அது அவர்களுக்கு" வளரு நிலத் திலே நிலைபெறச் செய்வதொரு நெறியா மென்றவாறு. வளருநிலமென்பது, நாலு திசையும் ஆணை’யையுடைய நிலம். ஆராய்ந்தறிதலாவது, வலிகாலம் இடமென இதுகளாலே" தனக்கும் பகைவர்க்கும் உளவாய நிலைமைகளும் போர் தொடங்குமாறும் அதற்குவரு மிடையூறுகளும் அவற்றை நீக்கு மாறும் வெல்லுமாறும் அதனாற் பெறப்பட்டபயனும் முதலா யின. இதுகளிலே"சிறிது உபாயமில்லாமற் பகையாளியை வெல் லுதல் அவர்களுக்கு நல்ல அரணான நிலத்தைக் கொடுத்தாற் போல வென்பதாம். ஆகவே எதிராளிகள் பெலங்களை நன்றாக வறிந்து வெல்லுங்காலம் பார்த்து வெல்லவேணு மென்பதாம் . டு ===== - 1. செய்கிற 2. துடங்கார் என்று காகிதச் சுவடியிலுள்ளது. 3. இது அச்சு நூலில் இல்லை 4. துடங்கவே என்று காகிதச் சுவடியி லுன்னது 5 என்கிறதை 6. பகைவர்களுக்கு 7. ஆணை யென்பது அச்சு நூல் 8. இவைகளாலே 9. இவைகளிலே