பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 2 19 466. செய்தக்க வல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும் என்பது ராசா வானவன் தான் செய்யத்தகுவன வல்லாத காரியங் களைச் செய்யவே கெடும்; தன்னாற் செய்யப்பட்ட காரியங் களைச் செய்யாதிருக்கினும் கெடும் என்றவாறு. செய்தக்க வல்ல வாவன: பெரிய முயற்சியவும், செய்தாற் பயனில்லனவும், அது சிறிதாயினவும், ஐயமாயினவையும், பின் துயர் விளைவிப்பனவும் என இவை, செய்யத்தக்க வாவன: அவற்றின் மறுதலையாயின. இச செய்யாமைகளால் அறிவு ஆண்மை பெருமை என்னும் மூன்று மில்லாத விடத்துப் பொருள் படையென விருவகைத்தாய பெருமை சுருங்கிப் பகை வர்க்கெளியனாமாகலின் இரண்டுங் கேட்டிற் கேதுவாயின, ஆகவே செய்யத் தக்க காரியங்களை யறிந்து செய்து, செய்யத் தகாத காரியங்களைத் தவிரவேணு மென்பதாம். ਾਂ 467. எண்ணித் துணிக கருமந் துணிந்தபி னெண்ணுவ மென்ப திழுக்கு என்பது செய்யத்தக்க காரியங்கள் முடிவுற வுபாயங்களை நன்றாக வெண்ணிச் செய்க. உபாயங்களை யறியாமற் செய்து பின்னு பாயந் தேடிக் கொள்வோ மென்பது குற்றமா மென்றவாறு. உபாயமாவது; பொருளைக் கொடுத்தல், நல்சொற்களைச் சொல்லுதல், விசேஷங்களாற் கண்டித்து வேறுபடுத்தல், தெண்டித்தல் என இவை தான சாமபேத தண்ட மென்பன. இந்த வுபாயங்களாலாய்ந்து செய்ய வேணு மென்பதாம். GT 468. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும் என்பது 1. அவற்றின் மறுதலையாயின - அச்சுநூலில் உள்ளது ". செய்யாத . முடியுற 4. பெற்றுப் என்று காகிதச் சுவடியி லுள்ளன.