பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.2.2 திருக்குறள் 47.2. ஒல்வ தறிவ தறிந்ததன் கட்டங்கிச் செல்வார்க்குச் செல்லாத தில் என்பது தனக்கான காரியமும் அந்தக் காரியத்துக்கு வேண்டிய வறுமை களையு மறிந்து, எப்பொழுதும் மனதை அந்தக் காரியத்தின் மேல் வைத்துச் செய்யவல்லவர்களுக்கு முடியாத காரியமில்லை யென்றவாறு. வினை வலியும் மனவலியும் அதிகமானால் எல்லாக் காரியமு முடியு மென்பதாம். 2 473. உடைத்தம் வலியறியா ருக்கத்தி னுக்கி யிடைக்கண் முரிந்தார் பலர் என்பது தங்களுடைய பெலத்தை யறியாமல் மனசு உற்சாகத்தி னாலே தன்னிலும் பெலவானுடனே பகையைச் செய்து கொண்டு அவர்கள் வறுமையினாலே கெட்டுப் போன பேர் லோ சத்திலே யநேகம்பே ருண்டென்றவாறு. ஆகவே தம் வலியறிந்து தொடங்குக' வென்பதாம். IH_ 474. அமைந்தாங் கொழுகான் அளவறியான் றன்னை வியந்தான் விரைந்து கெடும் என்பது அசலிலே’ யிருக்கிற ராசாக்களுடனே சினேகம் பண்ணிக் கொண்டு மிரான், தன்னுடைய பெல வலுமையு மறிந்து செய் யாமற் றன்னைத் தானே பெரியவனாக நினைச்சுக் கொண்டு பகை பண்ணிக் கொண்டவன் கொப்பெனக் கெட்டுப் போவா னென்றவாறு. அசல்" ராசாக்களுடனே சினேகமாயிருக்கிறது பகையாயிருக் கிறது இரண்டிலுந்தான் பெலவானானால் பகையாகவும் மெலிய - 1. துடங்குக - என்பது காகிதச் சுவடியிலுள்ளது 2. அயலிலே 3. நினைத்து 4. கொப்பு-விரைவு .ே அயல்