பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 திருக்குறள் பொருளுக் கேற்கக் கொடுக்கிறதாவது, தனக்குள்ள பொருளை நாலுபங்காக்கி ரெண்டு பங்கு தன்சிலவு’க்கும் ஒரு பங்கு மேல் வருகிற இடையூறு நீக்குதற்கும் வைத்து நின்ற வொரு பங்கைக் கொடுக்க வேணு மென்பதாம். GT 478. ஆகா றளவிட்டி தாயினுங் கேடில்லை போகா றகலாக் கடை என்பது அரசனுக்குப் பொருள் வருகின்ற வழி கொஞ்சமானாலும் கேடில்லை, பொருள் சிலவழிகிற வழி வருகிறத்திலும்’ அதிக மாகாதிருந்தா லென்றவாறு. ஆதாயத்திலும் சிலவதிகமானாற் கேடுவருமென்பதாம். அ 479. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல இல்லாகித் தோன்றாக் கெடும் என்பது தனக்குள்ள பொருளை யிம்மாத்திரமென்றறிந்து அதற்குத் தக்கதாய் வாழாமல் அதிகமாகச் சிலவழிக்கிறவன் வாட்கை" இருக்கிறாப்போலே" யிருந்து ஒன்றுமில்லாமல் கெட்டுப்போ மென்றவாறு. பொருளுக் குத தக்கதாய் வாழ்கிறதாவது, தனக்கு வருகிறத் திலும்குறையச் சில விட்டாலும் சரியாகச் சிலவுபண்ணவேணு மென்பதாம். சிா 480 உளவரை துக்காத வொப்புர வாண்மை வளவரை வல்லைக் கெடும் என்பது தனக்குள்ள பொருளை யறியாமற் சிலவு பண்ணின கீர்த்தி யால் அவன் செல்வம் வகையறக் கெடுமென்றவாறு. 1. இரண்டு 2. செலவு 3. வருகிறதிலும் 4. வாழ்க்கை 5. இருக்கிறாற் போலே 6 வல்லை - விரைவில்