பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 8 திருக்குறள் தாங்கள் வெல்ல வேணு மென்று நினைக்கிறவர்கள் பகை, வற்கு முடியுங் காலம் வருமளவும் அவரைக் கண்டால் வணங்க வேணும்; அந்தக் காலம் வந்தால் அவர்கள் பெருமை யில்லா மற் கெடுவ ரென்றவாறு. பகை தீர்த்துக் கொள்ள வேண்டி மிகவுந் தாழ்வார்கள்; அப்படி வணங்கித் தாழ்ந்தாலவர்கள் தம்மைக் காராமல் இருப்பார் கள்; அதனாலே தப்பாமற் கெடுவரென்பதாம். تلے۔ | 489, எய்தற் கரிய தியைந்தக்கா லந்நிலையே செய்தற் கரிய செயல் என்பது பகையை வெல்ல நினைக்கிறவர்கள், தங்களா லெய்துதற் கரிய காலம் வந்து கூடினால், அந்தக் காலம் கழிக்கிறத்துக்கு” முன்னே செய்ய வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேணு மென்றவாறு. காலம் பக்குவம் போனால் திரும்பி வாரா தென்பதாம். அன் 490. கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்க சீர்த்த விடத்து என்பது பகைவர்மேற் காரியஞ் செய்யாதிருக்கு மளவுங் கொக்கைப் போலே சும்மா பாத்துக் கொண் டி ருக்க, அந்தக் காரியஞ் செய்து முடிக்குங் காலம் வந்தாற் கொக்கு மீனைப் பிடிச்சுக் கொள்ளுமாறு போலத் தப்பாமற் செய்க வென்றவாறு. μD ஆக அதிகாரம் சல்சுக்குக்குறள் சள கல் இப்பால் 50. இடனறிதல் என்பது, வலியுங் காலமு மறிந்து பகைவர் மேலே தண்டு போற அரசன் தனக்கேற்ற நிலத்தையறிந்து செல்ல வேணு மென்றவாறு. 1 - காவாமல் 2. கழிகிறதற்கு 3. பார்த்துக் பிடித்துக் போகிற்