பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜைன உரை 22 Q 491. தொடங்கற்க எவ்வினையும் எள்ளற்க முற்றும் இடங்கண்ட பின்னல் லது என்பது சத்துருக்களைச் செயிக்கத்தக்க இடங்கண்ட பிறகல்லாமல் அதற்கு முன்னே பகைவர் மேலே யொரு காரியத்தையும் செய்ய வேண்டாம்; அவர்களைக் கொஞ்ச மென்று இகழ வேண்டாம் என்றவாறு. இடமாவது, வாசல்களாலும் திட்டிகளாலும் சத்துருக்கள் வாராததாய்ச் சேனைகள் இருக்குறத்துக்கு யோக்கியமாய் நீரும் நிழலு மரணுமுடையது. இப்படிப்பட்ட இடம் பெற்றால் பகை முடிக்கத் துடங்குக' என்பதாம். தி 492. முரண்சேர்ந்த மொய்ம்பி னவர்க்கு மரண்சேர்ந்தா மாக்கம் பலவுந் தரும் என்பது அதிக பெலத்தினை யுடையவர்க்கும் அரணாகிய இடத் தைச் சேர்ந்தால் அநேகம் நன்மைகளைக் கொடுக்கு மென்ற வாறு. முரண் சேர்ந்தவர்களாவது, பூமி ராச்சியம் எல்லார்க்கும் பொதுவென்றெண்ணாமல் நம்முதுபோகுது' என்கிற மனசுடை யவர்களாம். உ 493. ஆற்றாரு மாற்றி யடுப விடனறிந் து போற்றார்கட் போற்றிச் செயின் என்பது பெலவான் களல்லாதாரும் பெலவான்களாய் வெல்வர், அதற்கேற்ற இடத்தினையறிந்து சேர்ந்து தம்மைக் காத்துக் கொண்டு பகைவர் மேலே காரியம் பண்ணினா லென்றவாறு. 1. துடங்கற்க என்று காகிதச் சுவடியிலுள்ளது. 2. இருக்கிறதற்கு 3. தொடங்குக 4. நமது போகிறது