பக்கம்:திருக்குறள், ஜைன உரை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.30 திருக்குறள் தம்மைக்காத்தலாவது, பகைவர்களாலே உபத்திரவம் வராமற் காத்துக் கொள்ளுகிறதாம். Fட 494. எண்ணியா ரெண்ண மிழப்ப ரிடனறிந்து துன்னியார் துன்னிச் செயின் என்பது தாம் பகைவரைச் செயிக்கிறத்துக்கு ஏற்ற விடத்தினை யறிந்து சென்று அரணாகிய காவலைப் பொருந்தி நின்று செய்தால் அவரை வெல்குறோம்’ என்று நினைந்திருந்த ராசாக்கள் அத்த எண்ணமிழந்து போவார்க ளென்றவாறு. தன்னைக் காத்துக் கொண்டு வினை செய்தால் எந்தக் காரியமும் வெல்லு மென்பதாம். அ 495. நெடும்புனலுள் வெல்லு முதலை யடும்புனலி. னிங்கி னதனைப் பிற என்பது முதலை யாழமான தண்ணியிலே' யிருந்தால் எல்லாச் சீவன்களையும் வெல்லும்; அந்தத் தண்ணியை விட்டு வெளியே வந்தால் மற்றச் சீவன்களெல்லாம் முதலையை வெல்லுமென்ற வாறு. ஆனபடியினாலே யெல்லாரும் தங்கள் நிலையிலே யிருந்தால் பெலவான்களாய் வெல்லுவர்கள் நிலையைவிட்டுப் பிரிந்தால் பெலகீனராய் வெல்ல மாட்டார்கள். பகைவர்பேரிலே சண்டை பண்ணப் போறவர்களும் தமக்கு நிற்குறத்துக்கு" அரணாகிய இடமறிந்துபோய்ப் பகைவர் நிற்குறத்துக்குப் பொருந்தாத விடமறிந்து சென்று வெல்கவென்பதாம். டு 4 6. கடலோடா கால்வ னெடுந்தேர் கடலோடு நாவாயு மோடா நிலத்து என்பது 1. செயிக்கிறதற்கு 2. வெல்வோம் 3. தண்ணிரிலே 4. தண்ணிரை 5. போகிறவர்களும் 6. நிற்கிறதற்கு